சிரியா போரில் வடகொரியாவும் களம் இறங்கியது.. 12 கப்பலில் கெமிக்கல் குண்டுகள் அனுப்பியது அம்பலம்
சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போரில் தற்போது வடகொரியாவும் களம் இறங்கி இருக்கிறது. இரண்டு வருடமாக மறைமுகமாக இதில் செயல்பட்டு வந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
|
கெமிக்கல் குண்டுகள்
இந்த போரில் தடை செய்யப்பட கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது . பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் இது செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.
|
பயன்படுத்தியது
இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
வடகொரியா உதவி
இந்த கெமிக்கல் குண்டுகள் வடகொரியா மூலம் சிரியாவிற்கு கிடைத்து இருக்கிறது. வடகொரியாதான் 12 கப்பல்களில் இந்த குண்டுக்கான பொருட்களை வழங்கி இருக்கிறது. இது குறித்து அமெரிக்க பத்திரிக்கைகளை விரிவாக எழுதி இருக்கிறது.
|
நீண்ட நாள்
வடகொரியா 2015ல் இருந்தே இந்த குண்டுகளை அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறது. 2013ல் சிரியாவின் அனைத்து விதமான கெமிக்கல் குண்டுகளும் அழிக்கப்பட்டது. அதன்பின் புதிதாக வடகொரியா இப்படி உதவி செய்து இருக்கிறது.

உண்மைதான்
இந்த குண்டுகளில் காணப்படும் பல முக்கியமான வேதிப்பொருட்கள் வடகொரியா குண்டுகளால் காணப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க படை மிதவாத போராளிகளுக்கு உதவுவதால், வடகொரியா அதற்கு எதிரான நிலையை எடுத்து இருக்கிறது. இதுதான் நிறைய குழந்தைகளின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.
|
ஐநா தடை
இந்த குண்டுகள் ஜநாவால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது.
|
மோசம்
இந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது. கண்கள் எரிய தொடங்கும். மூச்சு குழலை சுற்றி பெரிய படலம் உருவாகும். குழந்தை சில நேரத்தில் மரணம் அடைவார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications