ஜப்பான் கடலை நோக்கி சீறிப்பாய்ந்தது.. வடகொரியாவின் "புது" ஏவுகணை டெஸ்ட்.. ஒலிம்பிக்கிற்கு குறி?

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது.

அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்ட நாடு வடகொரியா. அருகில் இருக்கும் தென்கொரியாவுடன் மோதல், ஜப்பானுடன் மோதல், அமெரிக்காவுடன் மோதல் என்று சுற்றி சுற்றி எதிரிகளாக இருக்க வடகொரியா அதிக அளவில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

முன்பு அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வந்தது. அதன்பின் ஷார்ட் ரேஞ்ச் மிஸைல் எனப்படும் குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது.

சோதனை

சோதனை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து பிடன் பதவி ஏற்ற பின் வடகொரியா ஏவுகணை சோதனை எதையும் நடத்தவில்லை. பிடன் பதவி ஏற்றபின் வடகொரியா ராணுவம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தது. அதேபோல் அதிபர் கிம் ஜோங் உன்னும் எதுவும் அதிரடியாக செய்யாமல் அமைதி காத்து வந்தார்.

டிரம்ப்

டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் அதிபராக இருந்த போது கிம் ஜோங் உன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தினார். அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்பும் கூட கிம் தொடர்ந்து இதேபோல் ஏவுகணை சோதனைகளை செய்து வந்தார். அமைதிக்கு இடம் கொடுக்காமல் கொரியாவை பரபரப்பிலேயே வைத்து இருந்தார்.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் தற்போது நீண்ட மாதங்களுக்கு பின் வடகொரியா நேற்று இரவு திடீரென மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. ஜப்பான் கடல் எல்லைக்குள் இந்த சோதனை நடந்துள்ளது. முக்கியமான ஜப்பானின் கடல் வணிக மார்க்கெட்டுக்கு அருகில் 400 கிமீ தூரத்தில் இந்த சோதனை நடந்துள்ளது.

இரண்டு

இரண்டு

அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை அந்த கடல் பகுதியில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வடகொரியாவின் இந்த சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது. இரண்டு நவீன புதிய வகை ஏவுகணைகள் ஆகும் இது... ஆனால் இதன் சக்தி முழுமையாக தெரியவில்லை.

ஏன்

ஏன்

அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றபின் முதல்முறை இப்படி ஏவுகணை நடக்கிறது. அதிலும் ஜப்பானில் ஒலிம்பிக் 2021 தீபத்திற்கான ஓட்டம் தொடங்கிய அதே நாளில் இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது.ஒலிம்பிக்கிற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடந்து இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+