இப்படியும் ஒரு போலீஸ்.. நம்ம ஊரில் அல்ல.. நார்வேயில்!
ஆஸ்லோ: நம்ம ஊர் (நம்ம ஊர் என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும்தான்) போலீஸைப் பற்றிப் பேசினாலே பலருக்கு பயம் வரும். எத்தனை எத்தனை புகார்கள், குற்றச்சாட்டுகள் நம் ஊர் போலீஸ் மீது.. லாக்கப் சாவு என்பது இந்தியா முழுவதும் பரவலாக உள்ள புகார்களாகும். ஆனால் நார்வே நாட்டு போலீஸாரின் கதையைக் கேட்டால் அப்படியே இரு விழிகளும் ஆச்சரியத்தில் ஈபிள் கோபுரம் அளவுக்கு உயர்கின்றன.
இவன்தாண்டா போலீஸ் என்றும் சபாஷ் போட வைக்கிறது. நார்வே நாட்டு போலீஸ் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, ஒழுங்குடன் கூடிய காவல்துறையில் ஒன்றாக திகழ்கிறதாம்.
நார்வே நாட்டு போலீஸாரிடம் துப்பாக்கி இருந்தாலும் அதை அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லையாம். மிக பயங்கரமான குற்றவாளிகளிடம் கூட அவர்கள் துப்பாக்கியை பிரயோகிப்பதில்லையாம்.

10 வருடமாக ஒருவரைக் கூட கொல்லவில்லை
நார்வே போலீஸார் கடந்த 10 வருடங்களில் ஒருவரைக் கூட சுட்டுக் கொன்றதில்லையாம். எந்தவிதமான சூழலாக இருந்தாலும் துப்பாக்கியை எடுக்காமலேயே சமாளித்து விடுகிறார்களாம்.

2006ம் ஆண்டோடு சரி
கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இதுவரை யாரையும், ஒருவரையும் நார்வே போலீஸார் சுட்டுக் கொன்றதில்லையாம். குறிப்பாக பொதுமக்களிடம் துப்பாக்கியைப் பிரயோகித்ததில்லையாம்.

2011ல் ஒருமுறை மட்டும்
இருப்பினும் 2011ம் ஆண்டு ஒருமுறை மட்டும் துப்பாக்கியை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அப்போது உடயோ மற்றும் ஆஸ்லோவில் ஒரு தீவிரவாதி திடீர் தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்று குவித்தான். அவனது பெயர் ஆண்டெர்ஸ் பிரவிக். அவனை எச்சரிக்கும் விதமாக ஒரே ஒருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் போலீஸார். அதில் அந்த தீவரவாதிக்குக் காயம் கூட ஏற்படவில்லை. அப்படி ஒரு துப்பாக்கிச் சூடு!

2014ல்
2014ம் ஆண்டு பணியில் இருந்த போலீஸார் யாரும் துப்பாக்கியைப் பிரயோகிக்கவில்லை. மாறாக பணியில் இல்லாத சமயம் பயிற்சிக்காக 42 முறை சுட்டுள்ளனர்.

அமெரிக்க போலீஸார் ரொம்ப மோசம்
மறுபக்கம் அமெரிக்க போலீஸார் படுமோசம். இந்த வருடம் மட்டும் அவர்கள் இதுவரை 600க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றுள்ளனர். யாராவது தாக்க வந்தாலே சுட்டுக் கொன்று விடுவது அமெரிக்க ஸ்டைல் ஆகும்.

இங்கிலாந்து போலவே
இங்கிலாந்திலும் இப்படித்தான். எந்த மோதலாக இருந்தாலும் முடிந்தவரை பலப்பிரயோகம் செய்யாமல் சமாளிக்கப் பார்ப்பார்கள். அதிகபட்சம் போனால் லேசான தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுதான். துப்பாக்கி சூடெல்லாம் அரிதிலும் அரிதானது. அதேபோலத்தான் நார்வே போலீஸாரும் செயல்படுகிறார்களாம்.

ரொம்ப முடியாமல் போனால்தான்
அடக்க முடியாத அளவுக்கு நிலைமை போனால் மட்டுமே துப்பாக்கியைக் கையில் எடுப்பார்களாம் நார்வே போலீஸார். அப்போதும் கூட சுட மாட்டார்களாம். யாரையும் காயப்படுத்தக் கூட நினைக்க மாட்டார்களாம்.

ம்.. நம்ம ஊர் போலீஸும் இருக்கே
நம்ம ஊரில் ராமநாதபுரத்தில் ஒரு டீன் ஏஜ் இளைஞன் வாயில் துப்பாக்கியைத் திணித்து ஒரு இன்ஸ்பெக்டர் சுட்டுத் தள்ளியது என்னவோ இப்போது நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications