ஹில்லாரி மகள் பிரசவத்திற்கு தனது பாதுகாப்புப் படையை வழங்க முன்வந்த ஒபாமா!
நியூயார்க்: முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் மகள் செல்சியின் பிரசவத்தின்போது, வாகனத் தடை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தனது பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிபர் ஒபாமா, கிளிண்டன் குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூயார்க் நகரில்தான் தற்போது செல்சி இருக்கிறார். கர்ப்பிணியாக உள்ள அவருக்கு பிரசவ தேதி நெருங்கி விட்டது. ஆனால் நியூயார்க் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு வந்து விடுமோ என்ற கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து நியூயார்க் வந்திருந்த அதிபர் ஒபாமா கூறுகையில், நியூயார்க்கில் போக்குவரத்து சிக்கலாக உள்ளதாக கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. நான் வந்தபோது போக்கவரத்து பாதிப்பு எதையும் பார்க்கவில்லை.
இருப்பினும் தேவைபப்பட்டால், செல்சியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எனது பாதுகாப்புப் படையை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கிளிண்டன் குடும்பத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய உதவி செய்வார்கள் என்றார் ஒபாமா.
தனது பேச்சின்போது முன்னாள் அதிபர் பில் கிளிண்டனையும், ஹில்லாரி கிளிண்டனையும் அவர் தாத்தா, பாட்டி ஆகப் போவதற்காக வாழ்த்தினார்.
நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்று ஒபாமாதான் கூறுகிறார். ஆனால் அவரும்போது போக்குவரத்தை நிறுத்தி அவர் எளிதாக செல்ல போக்குவரத்துப் போலீஸார் வழி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பில் கிளிண்டன் - ஹில்லாரி தம்பதிக்கு செல்சி ஒரே மகள் ஆவார். இப்போதுதான் முதல் முறையாக அவர் தாயாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications