அமெரிக்காவுக்கே அதிபரா இருந்தாலும்.. மனைவி குறித்து பேசும் போது நா தழுதழுக்க கண்கலங்கிய ஒபாமா
அதிபர் ஒபாமா இன்று தனது இறுதி உரையின் போது அவரது மனைவி மிட்செல் குறித்து பேசினார். அப்போது அவர் கண்கலங்கினார்.
சிகாகோ: அதிபர் ஒபாமா இன்று நாட்டு மக்களுக்கு நன்றியுரையாற்றினார். அப்போது தனது மனைவி மிட்செல் குறித்து பேசிய அவர் கண்கலங்கி குரல் தழுதழுத்தார்.
அதிபர் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 20 தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சிகாகோவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது இறுதி உரையையாற்றினார்.

அப்போது தான் அதிபராக பதவி வகித்த கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்கா எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார். இறுதி உரையில் தனது மனைவி மிட்செல் குறித்து பேசிய ஒபாமா, மிட்செல் கடந்த 25 வருடங்களாக தனது குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் தனக்கு நல்ல மனைவியாக மட்டுமின்றி சிறந்த தோழியாகவும் இருந்ததாக கூறினார்.
அதிபருக்கான வெள்ளை மாளிகையை அனைவரும் வந்து செல்லும் மாளிகையாக மிட்செல் மாற்றியதாக கூறினார். பல நேரங்களில் தனக்கு உற்ற துணையாக பெரும் ஆதரவாகவும் தனது மனைவி இருந்ததாக ஒபாமா கூறினார்.

தன்னையும் தனது நாட்டையும் பெருமைபட வைத்துள்ளதாக மிட்செல்லை ஒபாமா புகழ்ந்தார். மேலும் வரும் தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த ரோல் மாடலாக இருப்பார் என்றும் புகழாரம் சூட்டினார்.மிட்செல் குறித்து பேசும் போது ஒபாமாவின் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது. ஒபாமா கண்ணீர் விடுவதை பார்த்த பார்வையாளர்களும் கண் கலங்கினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications