தலையே சுத்துது.. இறைச்சியைவிட 3 மடங்கு அதிகமாம் வெங்காய விலை.. பிலிப்பைன்ஸ் துயரம்
வெங்காய விலை உயர்வால் பிலிப்பைன்ஸ் மக்கள் சிக்கி கொண்டுள்ளனர்
மணிலா: பிலிப்பைன்சில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகமாகி உள்ளதாம்.. இதனால், அந்நாட்டு மக்கள் கலங்கி போய் உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல, பாகிஸ்தானை மட்டுமல்ல, உலக நாடுகளையும் வெகுவாக பாதித்து வருகிறது.. இதற்கெல்லாம் பிரதான காரணம் உக்ரைன் -ரஷ்யா போர் ஆகும்.
அதன் தாக்கம்தான் பிலிப்பைன்ஸிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதாரம் சரிந்துள்ளது.. பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது..

காய்கறி
இதனால், உணவுப் பொருள்களின் விலை எகிறி வருகிறது. இதில், வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.. குறிப்பாக, பெரிய வெங்காயம் 3 மடங்கு விலை அதிகமாக விற்கிறார்களாம்.. மேலும், உள்நாட்டு உற்பத்தியும், விநியோகமும் குறைந்து வருகிறது.. அதனால், அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 தொன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன..

பூண்டு
தென்கிழக்கு ஆசிய நாட்டை பொறுத்தவரை, அவர்களுக்கு வெங்காயம்தான் மிக மிக முக்கியமான உணவாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பூண்டு உள்ளது.. எனவே, பிலிப்பைன்ஸில் மட்டும், மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் தொன் காய்கறிகள் தேவைப்படுகிறது... ஆனால் வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்கு 650 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ 11,395.09) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்கப்படுகிறது. இது நம்முடைய இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.950 ஆகும்..

மாட்டிறைச்சி
அதாவது, ஒரு கிலோ வெங்காயம் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது அங்கு அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகமாம்.. பதுக்கல் போன்ற நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலைவாசி உயர்வு அதிகரிக்க இதுவே பிரதானமான காரணமாக அமைந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் கடும் விழிபிதுங்கி உள்ளனர்.. அவசர கால வெங்காய இறக்குமதி மூலம் அடுத்த மாதம் அங்கு விலை கட்டுக்குள் வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கல்கள்
ரஷ்யா-உக்ரைன் போர், விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.. இதன் தாக்கம்தான் பிலிப்பைன்சிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், என்ன கொடுமை என்றால், ஒரு கிலோ வெங்காயம் வாங்க வேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளதாம்..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications