Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’சித்த வைத்திய சிகாமணி’ ராகூஷ்..மூலிகையை பயன்படுத்திய ஒராங்குட்டான்! அதிர்ந்து போன ஆய்வாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சுமத்ரா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும் ஒரு ஒராங்குட்டான் தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தை மூலிகையை வைத்து சரி செய்துள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விலங்கு ஒன்று மருத்துவ முறையை பயன்படுத்துவது தற்போதே முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த பூமியில் பல உயிர்கள் வசித்தாலும் மனிதன் தான் மட்டுமே உயர்ந்தவன் தனக்கு மட்டுமே ஆறறிவு என்று பெருமையை தானே பறைசாற்றிக் கொண்டு வருகிறான். கலாச்சாரம், குடும்ப வாழ்க்கை, ஆடை, மருத்துவம், அலங்காரம் என தனக்கு மட்டுமே சில உயரிய குணங்கள் இருப்பதாக மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் உண்மை அப்படி இல்லை..

Orangutan used herbs to heal wounds in Sumatra island

உலகின் பல மூலைகளில் வசிக்கும் உயிரினங்கள் மனிதனுக்கு இணையான பல பண்புகளை கொண்டிருக்கிறது. காகங்களுக்கு எவ்வளவு அறிவு கூர்மை இருக்கிறது என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

விலங்குகளின் சாதுர்யம்: கதைகளில் மட்டுமல்ல நிஜத்திலும் காகங்கள் பல்வேறு வழிகளை கையாளுகிறது இறையையும் தண்ணீரையும் எடுத்துக் கொள்வதற்காக.. அது மட்டுமில்லாமல் மனிதர்களின் மூதாதையர்கள் ஆன குரங்குகள் மனிதனுக்கு இணையான அறிவுக்கூர்மையை கொண்டிருக்கின்றன. சிம்பன்சிகள், ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் பல நுணுக்கமான விஷயங்களை செய்து வந்திருக்கின்றன. ஆனால் மருத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது என இந்த உலகம் இதுவரை நம்பிக் கொண்டிருந்த நிலையில் அதை பொய்யாக்கி இருக்கிறது ஒரு ஒராங்குட்டான்.

ஒராங்குட்டான்: சுமத்ரா தீவில் வசிக்கும் கணன் லீசர் தேசிய பூங்காவில் ராகூஷ் என்ற 35 வயதான ஒராங்குட்டான் வசித்து வருகிறது. இதன் செயல்பாடுகளை பல ஆண்டுகளாகவே ஆய்வாளர்கள் கண்காணித்து வந்திருக்கிறார்கள். இந்த ஒராங்குட்டான் சீசன்களை ஞாபகம் வைத்து காடுகளின் பல பகுதிகளில் அலைந்து திரிந்து தனக்கு விருப்பமான பழங்களை சாப்பிடுவதை அவர்கள் கண்டுபிடித்து இருந்தனர். இந்த நிலையில் தான் உலகத்தின் முதல் விலங்கு மருத்துவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ராகூஷ்.

முகத்தில் காயம்: கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி இந்த குரங்குக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது இதை அடுத்து அந்த குரங்கை ஆய்வாளர்கள் கண்காணிக்க தொடங்கிய நிலையில், சில நாட்களில் அந்த காயம் சரியாகி இருக்கிறது. ஆனால் விஷயத்தை ஆய்வாளர்கள் அப்போது கவனிக்கவில்லை. புகைப்படங்களை ஆய்வு செய்த பின்னர்தான் அது தன் காயங்களை குணப்படுத்துவதற்காக மூலிகையை பயன்படுத்தியது தெரியவந்தது.

மூலிகை பயன்பாடு: ஆம் பல ஆண்டுகளாக நாம் காயங்களை சரி செய்வதற்காக மஞ்சளை பயன்படுத்தி வருகிறோம் அல்லவா அந்த மஞ்சள் வேரை வைத்து தான் அது தனது காயத்தை ஆற்றி இருக்கிறது. காட்டில் கிடைக்கும் மஞ்சளை தேடி எடுத்து அதன் வேரை வாயால் கடித்து கசக்கி ஒரு பேஸ்ட் போல முகத்தில் பூசி இருக்கிறது. ஒரே மாதத்தில் காயம் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு அது சரியாகி இருந்தது. மிருகம் ஒன்று தனது காயத்தை சரி செய்ய மூலிகைகளை பயன்படுத்துவது குறித்து தெரிய வந்துள்ளது இதுவே முதல் முறை என்கிறார் ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழக பேராசிரியரான மைக்கேல் ஹவ் மேன்.

விலங்குகள் நுண்ணறிவு: பொதுவாக விலங்குகள் தங்கள் காயங்களை சரி செய்ய பல்வேறு வழிகளை பின்பற்றி வந்திருக்கின்றன. ஆப்பிரிக்கா பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட வகை சிம்பன்சிகள் பூச்சிகளை கூழாக்கி அதனை தனது காயத்தின் மேல் போட்டுக் கொள்ளும். தசை வலியில் இருந்து தங்களை காப்பாற்றி ஒராங்குட்டான்கள் சில மூலிகைகளை பயன்படுத்தி வந்திருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் புனுகு பூனை வயிற்றுக்குள் இருக்கும் பூச்சிகளை கொல்வதற்கு சில இலைகளை அடிக்கடி சாப்பிடும் என்பார்கள். மேலும் பறவைகள் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டால் எறும்புகள் இருக்கும் இடத்தில் அமர்ந்து அதன் மேல் இருக்கும் ஒட்டுண்ணிகளை எறும்புகளுக்கு உணவாக்குவது வழக்கம்.. இவை உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ஒராங்குட்டான் ஒன்று மருத்துவராகி இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+