கேட்கும் போதே நடுநடுங்குதே.. காசாவில் கல்லறைகளான கட்டிடங்கள்! சிதறிக்கிடந்த 10 ஆயிரம் உடல்கள்!
காசா: காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிரமான குண்டுவீச்சு தாக்குதல்களால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியுள்ளதாக அங்குள்ள குடிமைப் பாதுகாப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உடல்களை மீட்பது மிக பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
காசா நகரின் கிழக்குப் பகுதியான அல்-சாஹா பகுதியில் செப்டம்பர் 17 அன்று நடந்த குண்டுவீச்சில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தின் உடல்கள் பெரும்பாலும் ஆழமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததாக மீட்புக் குழுவின் உறுப்பினர் நூஹ் அல்-ஷக்னோபி தெரிவித்தார்.
அல்-ஷக்னோபி குழு முதலில் இரண்டு சிறுமிகளின் உடல்களை கண்டெடுத்து, பின்னர் இடிபாடுகளுக்குள் ஊர்ந்து சென்று மற்றவர்களைத் தேடியது. "யாரேனும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை இருந்தால்தான் கீழே செல்வோம். இல்லையெனில் மேலிருந்து தோண்டுவோம்," என்று அவர் கூறினார். அப்படி தேடிக்கொண்டிருக்கும்போது, இடிபாடுகளின் ஆழத்தில் 'நான் இங்கே' என்று குரல் கேட்டது. அந்த சிறுமியை அவர்கள் உயிருடன் மீட்டனர்.

காசா குடிமைப் பாதுகாப்பு படையில் தற்போது சுமார் 900 பேர் மட்டுமே உள்ளனர். இரண்டு வருட தாக்குதல்களுக்குப் பிறகு, இந்த படையின் செயல்திறன் 90% குறைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கனரக இயந்திரங்கள் இல்லாததால், அவர்கள் சுத்தி, கோடரி, கரணை போன்ற எளிய கருவிகளால் மட்டுமே தோண்டுகின்றனர். ஓர் உடலை மீட்பதற்கே பல நேரங்களில் ஒரு நாளுக்கு மேல் ஆகிறது. அவர்கள் மதிப்பீட்டுப்படி, காசா முழுவதும் இடிபாடுகளுக்குள் 10,000-க்கும் அதிகமான உடல்கள் இருக்கலாம். சில இடங்களில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருப்பதைத் தெரிந்திருந்தும், இயந்திரங்கள் இல்லாததால் மீட்க முடியாமல் இருப்பதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளார்.
அல்-ஷக்னோபியின் வீடு ஏற்கனவே அழிந்துவிட்டது. குடும்பம் தெற்கில் தஞ்சம் அடைந்துள்ளது. "போர் நிறுத்தம் வந்தால் மக்கள் அமைதி பெறலாம்; ஆனால் நாங்களுக்கோ அப்போதுதான் உண்மையான பணி தொடங்கும் - உடல்களை மீட்பது," என்று அவர் கூறுகிறார். அவருடைய அத்தையின் உடலும் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கக்கூடும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது. சில பகுதிகளை இஸ்ரேல் படைகள் 'யெல்லோ ஸோன்' என அறிவித்து, மீட்பு பணிக்கே அனுமதி வழங்கவில்லை. இதனால் பலரின் உடல்களை எட்ட முடியாமல் உள்ளது.
இந்த அணியின் மற்றொரு உறுப்பினர் அல்-கம்மாஷ், "இடிபாடுகளில் இருந்து குரல் கேட்டும் உள்ளே செல்ல முடியாத நிலை வந்தால் அது மிகுந்த வேதனை," என்கிறார். சுவர் கீழ் சிக்கியிருந்தால் ஒரு உடலை மீட்க 10-12 மணி நேரம் ஆகும். சில நேரங்களில் மீட்க முடியாமல் போகிறது என்றும் அவர் கூறினார். பல உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் உள்ளன. டிஎன்ஏ சோதனை செய்ய இயலாததால், உடைகள், நகைகள் அல்லது அடையாள அட்டைகள் மூலம் மட்டுமே அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அடையாளம் தெரியாத உடல்கள் பெயரில்லா கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றன.
உடல்கள் அழுகிய நிலையில் கிடப்பதால் துர்நாற்றம் காரணமாக அப்பகுதிக்கு செல்வதே கடினமாக உள்ளது என மீட்புக் குழு கூறுகிறது. பல இடங்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரின் உடல் உறுப்புகள் சிதறிய நிலையில் கிடக்கின்றன. மீட்புப் பணியாளர்களின் குடும்பங்களும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சூழல் இருந்தாலும், "ஒரே ஒரு உயிரைக் கூட காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையே எங்களை இந்த வேலையை செய்ய தூண்டுகிறது," என்கிறார்கள் அவர்கள். காசா முழுவதும் இன்னும் பல குடும்பங்கள் காணாமல் போன தங்களின் உறவினர்கள் எங்காவது உயிருடன் கிடைத்து மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications