ஷெபாஸ் ஷெரீப்பை கண்டுக்காத புதின் - மோடி! எஸ்சிஓ மாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான்?
பீஜிங்: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுளனர். இந்த மாநாட்டின் அமர்வு இன்று துவங்கும் முன்பாகே புதினும் மோடியும் தீவிரமாக ஆலோசித்தபடி நடந்து சென்றனர். அங்கே நின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை இருவருமே கண்டுகொள்ளவில்லை. இதனால், இறுக்கமான முகத்துடன் ஓரமாக ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டிருந்தார்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். எஸ்.சி.ஓ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டம் சீனாவின் யான்ஜின் நகரில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.

சீனாவில் பிரதமர் மோடி
நடப்பு ஆண்டில் எஸ்.சி.ஓ அமைப்புக்கு சீனா தலைமை தாங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, நேற்று சீனா சென்றார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்தித்து பேசினார்.
மோடி புதின் சந்திப்பு
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி, சீனா சென்றதால் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு இடையே, உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளான இந்தியா, சீனா தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசித்தது சர்வதேச அளவிலும் மிக உன்னிப்பாக கவனம் பெற்றது.
நேற்றைய ஆலோசனை முடிந்த பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க கூட்ட அரங்குக்கு வந்த தலைவர்கள் ஒருவரை பார்த்து உற்சாகமாக கை குலுக்கி பரஸ்பரம் பேசிக்கொண்டனர். அந்த வகையில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் என உலகின் பவர்ஃபுல் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டனர்.
இறுக்கமான முகத்துடன் பாகிஸ்தான் பிரதமர்
இந்த புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் அமர்வு கூட்டம் தொடங்கும் முன்பாக புதின், ஜி ஜின்பிங்குடன் மோடி சிரித்தபடி நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதே போல மற்றொரு வீடியோவில் புதினும் மோடியும் தீவிரமாக பேசிக்கொண்டு சென்றனர். அப்போது அங்கு ஓரமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் நின்றார். அவரை புதினோ, மோடியோ கண்டுக்கவே இல்லை. இதனால் இறுக்கமான முகத்துடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், ஒரு ஓரமாக நின்று கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்த ஆண்டு துவக்கத்தில், பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைபடுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஷெஹ்பாஸ் ஷரீஃப் மூக்கு உடைபட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications