Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானின் இதயத்தில் அடித்த ஆப்கன்.. ட்ரோன் அட்டாக்கில் தாலிபான்கள்.. கதறும் அசீம் முனீர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்துள்ளது. நேற்று இரவு முதல் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கலக்கத்தில் உள்ளார். தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் பெரிய போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இருநாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு டுரேண்ட் லைன் என்று அழைக்கப்பட்டுள்ளது. இதுதான் அந்த நாடுகளின் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளாகும்.

pakistan-afghanistan-war-talibans-drone-attack-on-islamabad

இந்நிலையில் தான் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் போராக மாறி உள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி என்னும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சி படையினருக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வந்தது.

பாகிஸ்தானுக்கு பதிலடி

கடந்த 22ம் தேதி திடீரென்று பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் சரமாரியாக குண்டு வீசின. கிளர்ச்சி படையினர் மீது குண்டு வீசுவதாக சொல்லி விட்டு அப்பாவி பெண்கள், குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கொன்றது.

இதனால் தாலிபான்கள் கொதித்து போனார்கள். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தனர். அதன்படி, பாகிஸ்தானுக்கு நேற்று இரவு தாலிபான்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானை சேர்ந்த 55 ராணுவ வீரர்களை கொன்று குவித்ததோடு, அந்த நாட்டின் 19 ராணுவ நிலைகளையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. போர் தொடங்கி விட்டதாக அறிவித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஆப்கானிஸ்தானை தாக்க உத்தரவிட்டார்.

ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் வியூகத்தில் அந்த நாட்டின் ராணுவ வீரர்கள், விமானப்படை களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் மீது போர் விமானங்கள், ஏவுகணை, ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்கியது. தரைவழி தாக்குதலும் நடந்தது. 133 தலிபான்களை கொன்றதோடு, 27 ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்தது.

பாகிஸ்தானை ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தானிடம் படை பலம், ஆயுத பலம் கிடையாது. இதனால் ஆப்கானிஸ்தான் எப்படி பாகிஸ்தானை சமாளிக்கும? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், பாகிஸ்தானை கதறவிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் ட்ரோன்களை கையில் எடுத்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்துடன் துல்லியமாக தாக்கும் ட்ரோன்களை வைத்து பாகிஸ்தானை அலறவிட்டுள்ளனர். அதன்படி பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், முகாம்களை நோக்கி ஆப்கானிஸ்தானின் ட்ரோன்கள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.

இதயத்தில் விழுந்த அடி

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தானின் இதயத்தில் தாலிபான்கள் அடித்தன. பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் உள்ளது. இந்த

இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபைசலாபாத்தில் ட்ரோன் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் நவ்ஷேரா ராணுவ கன்டோன்மென்ட், ஜம்ருட் ராணுவ தளம் மற்றும் அப்போடாபாத் பகுதிகளிலும் தலிபான்கள் ட்ரோன் அட்டாக் நடத்தினர்.

இது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து இந்த ட்ரோன்கள் தாக்குதல் செய்துள்ளன. இதனை தாலிபான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அல்லாவின் பெயரால் ஆப்கன் ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் வரை சென்று வான்வழி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

கதறும் அசீம் முனீர்

இதனால் பாகிஸ்தானின் கலங்கி உள்ளது. குறிப்பாக நம்மிடம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் அடிவாங்கிய பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானிடமும் அடி வாங்கி வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், பிரதமர் ெஷபாஸ் ெஷரீப் உள்ளிட்டவர்கள் கலங்கி போய் உள்ளன. இருப்பினும் தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எத்தகைய சேதம் ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை.

அதேவேளையில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்துவதும், அந்த தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம் பிடிப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+