இம்ரான் கான் போருக்கு ரெடி என்கிறார்.. வெளியுறவு அமைச்சரோ பேசலாம்னு சொல்றார்.. பாக். டபுள் ஆக்ட்!
Recommended Video
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்றும் போர் தொடுக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ள நிலையில் வெளியுறவு துறை அமைச்சரோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியிருப்பது அந்நாட்டின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இது பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
உலக நாடுகளை எல்லாம் தனக்கு ஆதரவு அளிக்க கேட்டு அவமானப்பட்டது பாகிஸ்தான். ஏனெனில் சீனா தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி கதவை மூடிக் கொண்டது.

பாகிஸ்தான் பிரதமர்
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றும் இந்தியாவே வெற்றி பெற்றது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை சாதாரணமாக விடமுடியாது என்றும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் போர் தொடுக்கவும் தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அமைச்சர்
மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால் காஷ்மீர் மீதான நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவரது கருத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மாமூத் குரேஷி மாறுபடுகிறார்.

இந்தியா
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வேண்டாம் என சொன்னதில்லை. எனினும் பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை இந்தியா உருவாக்குவது போல் எங்களுக்கு தெரியவில்லை.

நாட்டின் இரட்டை வேடம்
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான், இந்தியா , காஷ்மீர் மக்கள் ஆகியோரை சேர்ந்தது. எனவே வீட்டுக் காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. நேரடியாக போர்தான் என கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் நாட்டு அமைச்சரோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என கூறியிருப்பது அந்நாட்டின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications