அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் எளிதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
பாகிஸ்தானுடன் சுதந்திரம் பெற்ற நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை சுதந்திரம் மிக்கதாகவும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீது அதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடிவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்கு பாராட்டு
இம்ரான் கான் தனது உரையில், "நான் இந்தியாவை உதாரணமாக எடுக்கிறேன். அந்த நாடு நம்மோடு சுதந்திரம் பெற்றது. அதன் வெளியுறவு கொள்கைகளை பாருங்கள். இந்தியாவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை உள்ளது. ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் தனது முடிவில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

அமெரிக்கா அழுத்தம்
உக்ரைன் உடனான போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்களை மீறி இந்தியா தனது தேச நலனில் அக்கறை கொண்டு ரஷியாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர்
குவாட் கூட்டமைப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருந்தாலும், நாட்டு மக்கள் மீது நலன் கருதி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானில் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் தலைமையிலான ஆட்சி அமைத்து 7 மாதங்களாகியும் நாட்டின் பொருளாதார, அரசியல் குழப்பங்கள் தீரவில்லை.

மக்கள் நலன்
பணவீக்க நடவடிக்கையின் காரணமாக பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 7 மாதங்கள் கடந்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசாங்கம் மக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாகவும் 2, 3 முறை இந்திய அரசை இம்ரான் கான் பாராட்டி இருக்கிறார்.

ரஷ்யாவிடம் எண்ணெய்
கடந்த அக்டோபர் மாதமும் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கையை பாராட்டி பேசி இருந்தார் இம்ரான் கான். "புது டெல்லியால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்திட முடிகிறது. ஆனால், பாகிஸ்தானோ மேற்கத்திய நாடுகளுக்கு அஞ்சி அடிமையாக மாறி மக்கள் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்க மறுக்கிறது.

அடிமை பாகிஸ்தான்
நாட்டின் முடிவுகளை நாட்டிற்கு உள்ளேயே எடுக்க வேண்டும். ரஷியா குறைவான விலைக்கு எண்ணெய் தருகிறது என்றால், என் நாட்டு குடிமகனை காக்க வாய்ப்பு இருந்தால் எங்களிடம் எதுவும் கேட்க முடியாது. எங்களிடம் யாரும் எதுவும் சொல்லக்கூடாது. இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குகிறது. அடிமை பாகிஸ்தானுக்கு அனுமதி இல்லை.

சுதந்திரம் வேண்டும்
நான் சுதந்திரமான நாட்டை பார்க்க விரும்புகிறேன். நீதி வெல்ல வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாகிஸ்தானில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தங்கள் நாட்டை காக்க அவர்கள் அனைத்து விதமான தியாகங்களையும் செய்வார்கள்.

ஆட்சி கலைப்பு
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய இம்ரான் கான், தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கவின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். எப்போதெல்லாம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இம்ரான் கான் விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் இந்தியாவை பாராட்ட தவறுவது இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications