பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன்… வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்.. விமானியை கைது செய்துள்ளோம், பாக். பரபரப்பு!

    இஸ்லாமாபாத்:இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தனை காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவரை பிடித்து வைத்திருப்பது போன்ற வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹிரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    விழுந்த விமானம்

    விழுந்த விமானம்

    மேலும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த மிக் 21 ரக விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

    அடையாள எண்

    அடையாள எண்

    கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப் படையில் தமது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளளது.

    நின்றபடியே பேச்சு

    நின்றபடியே பேச்சு

    அந்த வீடியோவில் விமானி உடையுடன் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுகிறார். தாம் யார், என்ன பணி என்று அவர் அந்த வீடியோவில் விவரிக்கிறார். நாற்காலி ஒன்றுடன் கட்டப்பட்டுள்ள அவர் நின்றபடியே பேசுகிறார். அவர் பேசும் அந்த சில நிமிட வீடியோவானது ஆங்கிலத்தில் இருக்கிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:எனது பெயர் அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய அடையாள எண்: 27981 என்று கூறுகிறார்.

    அதிகரிக்கும் போர் பதற்றம்

    அதிகரிக்கும் போர் பதற்றம்

    விமானியை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் கூறும் தகவலில் உண்மை இல்லை என்று இந்திய ராணுவம் மறுத்து வந்தது. ஒரு கட்டத்தில் அவர் பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டுள்ளார் என்பதை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+