பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்திய அமெரிக்கா: விமான நிலையத்தில் கோட்டை கழற்றி சோதனை
பாகிஸ்தான் பிரதமரின் கோட்டை கழற்றச் சொல்லி அமெரிக்க விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸியை விமான நிலையத்தில் அவரது கோட்டை கழற்றி சோதனை மேற்கொண்ட சம்பவம் பாகிஸ்தானுடனான நட்புறவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பெயர் பனாமா பேப்பரில் இடம்பெற்றுள்ளதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 18-ஆவது பிரதமராக ஷாஹித் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவில் வசிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது சகோதரியை சந்திக்க சென்றிருந்தார். எளிமைக்கு சொந்தக்காரரான அப்பாஸியை சாதாரண பயணியை போல் அமெரிக்க விமான நிலைய போலீஸார் சோதனைக்குட்படுத்தினர்.

சூட்கேஸை பறித்து
அவரது கோட்டை கழற்றி, கையில் இருந்த சூட்கேஸை பிடுங்கி பார்த்து சோதனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பாகிஸ்தானுக்கு அவமானம்
இந்த காட்சிகளை திரும்ப திரும்ப பாகிஸ்தான் மீடியாக்களும் போட்டு காட்டுகின்றன. அப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் என்றே குறிப்பிடுகின்றனர்.

பயங்கரவாதம்
இந்த பயணத்தின் போது அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை அப்பாஸி சந்தித்திருந்தார். அப்போது பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பாஸியிடம் துணை அதிபர் வலியுறுத்தியிருந்தார்.

பிரதமர் அவமானம்
விசா தடை, சில நபர்கள் அமெரிக்கா வர தடை விதிப்பு உள்ளிட்டவற்றால் அமெரிக்க அரசு மீது பாகிஸ்தான் அதிருப்தியில் இருக்கிறது. மேலும் அணுஆயுத வர்த்தம் தொடர்பாக 7 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இந்த சூழலில் தற்போது பாக் .பிரதமரை சோதனையிட்ட விவகாரமும் பாகிஸ்தான் மத்தியில் கோபத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications