சீக்கிரம் வாங்க.. இஸ்லாமாபாத் திரும்பினார் இந்தியாவிற்கான பாக். தூதர்.. அவசர ஆலோசனை!

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்று இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்று இருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக பலியானார்கள். இந்த தற்கொலை படை தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

Pakistan recalls its ambassador in India for important consultations after Pulwama attack

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. ஆனால் இதற்கு பின் பாகிஸ்தான் அரசாங்கமும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு ஆதரவாக இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி இருக்கிறது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், இந்தியா விரைந்தார். பாகிஸ்தான் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக அவர் இந்தியா வந்தார்.

இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, இந்தியாவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்று இருக்கிறார். அவரை அவசரமாக அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.

தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று முடிவெடுப்பதற்காக பாகிஸ்தான், தனது தூதரை இஸ்லாமாபாத்திற்கு அழைத்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+