இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடுமையான பதிலடி தருமாம்.. ஜெயிலில் இருந்து இம்ரான்கான் கொக்கரிப்பு
டெல்லி: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடியை தரும் அளவுக்கு வலிமை இருக்கிறது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான 2 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இம்ரான்கான் கொக்கரித்திருக்கிறார்.
இது தொடர்பாக இம்ரான்கான் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமானது. அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த போது அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம் என பாகிஸ்தான் கூறியது. ஆனால் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இந்தியாதான் தரவில்லை. 2019-ம் ஆண்டு என்ன நடக்கும் என நான் யூகித்தேனோ அதேதான் தற்போது பஹல்காம் சம்பவத்துக்குப் பின்னர் நடக்க இருக்கிறது. இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு மீண்டும் பாகிஸ்தான் மீதுதான் குற்றம்சாட்டுகிறது. 150 கோடி மக்களைக் கொண்ட இந்திய அரசு பதற்றத்தை உருவாக்காமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
அமைதியை உருவாக்குவதுதான் முதன்மையானது; ஆனால் அது கோழைத்தனமானதும் அல்ல. இந்தியா ஏதேனும் தவறான சாகசத்தை நிகழ்த்த நினைத்தால், அதற்கு பதிலடி தரும் வலிமை பாகிஸ்தானுக்கு உண்டு. 2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதலின் போது ஒட்டுமொத்த பாகிஸ்தானும் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கான சுய நிர்ணய உரிமையை ஐநா தீர்மானங்கள் மூலம் உறுதியளித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மக்களை இந்திய அரசு ஒடுக்குகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் மேலும் நசுக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடியின் போர்ச் சூழல் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் ஆளும் மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்க சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்பது இந்தியாவுக்கும் இந்த பிராந்தியத்துக்கும் மட்டுமல்ல அதனையும் தாண்டி ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் பாகிஸ்தான் அரசு, அரசியல் பழிவாங்கல்களை கைவிட்டு நாட்டை ஒருங்கிணைக்க வேண்டும். இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications