தொடர்ந்து அழுகை.. பிறந்து 5 நாளே ஆன குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய கொடுமைக்கார நர்ஸ்
செபு: தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் வாயில் டேப் ஒட்டியதாக நர்ஸ் ஒருவர் மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு தந்தை ஒருவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு நகரில் உள்ள மருத்துவமனையின் ரேயன் நாவல் என்பவரது மனைவி ஜாஸ்மினுக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவில் உள்ள அக்குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அதன் வாயில் டேப் ஒன்றை ஒட்டியுள்ளார் குழந்தையை பராமரிக்கும் பணியில் இருந்த நர்ஸ் ஒருவர்.

அதிகமாக அழுகிறது...
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாவலின் மனைவி ஜாஸ்மின், ‘ஏன் குழந்தையின் வாயில் டேப் ஒட்டப் பட்டுள்ளது? என நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தை அதிகம் அழுவதாகத் தெரிவித்துள்ளார்.

டேப்பை அகற்ற மறுப்பு..
பின்னர் குழந்தையின் வாயில் உள்ள டேப்பை அகற்றுமாறு ஜாஸ்மின் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நர்ஸ் மறுத்து விடவே, ஜாஸ்மினே டேப்பை அகற்றியுள்ளார்.

புகார்...
டேப் குழந்தையின் வாய் பகுதியில் நன்றாக ஒட்டி இருந்ததாக, இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்கள் நாவலும், ஜாஸ்மினும். நிர்வாகமும் இது குறித்து விசாரணை நடத்துவதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளதாம்.

பேஸ்புக்...
இதற்கிடையே தன் குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் நாவல். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் வாயில் இவ்வாறு டேப் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அழுகை தான் குழந்தையின் முதல் மொழி...
புதிதாக பிறந்த குழந்தைகள் வார்த்தைகள் அல்லது செய்கைகளின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கப் பழகுவதற்கு முன் அழுகையின் மூலம் தான், தனது பசி, வலி மற்றும் இயற்கை உபாதைகளை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்பதை அந்த நர்ஸ் மறந்து விட்டார் போலும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications