என் அரசை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர்.. அமெரிக்காவிலிருந்து ப.சிதம்பரம்
வாஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மீண்டும் மக்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ளார்.
அங்கு அவர் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, வருகிற லோக்சபா தேர்தலில் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறியதாவது...

மீண்டும் ஆதரவு தருவார்கள்
இந்திய மக்கள், என் அரசுக்கு மீண்டும் வாக்களித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பல காரியங்கள் செய்துள்ளோம்
கடந்த ஓராண்டில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது.

2வது பாதியில் பலன் தெரியும்
இந்த சீர்திருத்தங்களுக்கு நடப்பு நிதியாண்டின் 2வது பாதியில் பலன் தெரியும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெரும் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோம்
கடந்த பத்து ஆண்டுகளில் இருந்த வளர்ச்சியை விட அதிக அளவிலான வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பிராந்திய கட்சிகளால் பாதிப்பில்லை
இந்தியாவில் பிராந்திய கட்சிகள் வளர்ச்சி அடைவதால் தேசிய அளவில் எந்தப் பாதிப்பும் வராது. அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்.

ஏன் வருகின்றன இந்தக் கட்சிகள்
தேசியக் கட்சிகள், பிராந்தியப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதால்தான் பிராந்தியக் கட்சிகள் வளர்கின்றன, வருகின்றன.

இந்தியா வித்தியாசமான நாடு
இந்தியா ஒரு வித்தியாசமான நாடு. பலவிதமான கட்சிகள், விருப்பங்கள், செயல்பாடுகளைக் கொண்ட கலவையான நாடு என்றார் அவர்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications