Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரிசையில் அணிவகுத்த வாகனங்கள்.. அடுத்த இலங்கையாக உருவெடுக்கும் பாகிஸ்தான்! பெட்ரோல் பங்குகள் மூடல்

பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து கூறிய அந்நாட்டின் பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் சமி கான், “பெட்ரோல் பற்றாக்குறை எங்களிடம் கிடையாது. எண்ணெய் விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து போதுமான அளவு எண்ணெய் கிடைக்கவ

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி முற்றியுள்ள நிலையில், பெட்ரோல் தட்டுப்பாட்டால் பங்குகள் மூடப்பட்டு வருகின்றன. திறந்திருக்கும் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. நிலைமை இலங்கையை போல மோசமடைந்து வருவதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கிறது. இதர நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. வரிசையில் நிற்பவர்களுக்கும் பெட்ரோல் டீசல் குறிப்பிட்ட அளவில்தான் வழங்கப்படும் என்றும் பங்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது பைக்கிற்கு வெறும் 200 ரூபாய்க்கும் லாரிக்கு ரூ.5,000க்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என பங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது எரிபொருள் கருப்பு நிறத்தில் தரமற்று இருப்பதாகவும், எனவே தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில் பொருளாதாரம் சீரடையாததால் தற்போது தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் குற்றச்சாட்டை பெட்ரோலியத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

மறுப்பு

மறுப்பு

இது குறித்து விளக்கமளித்த அந்நாட்டு பெட்ரோலியத்துறை இணையமைச்சர் முசாதிக் மாலிக், "பெட்ரோல் தட்டுப்பாடு இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். அப்படி எந்த தட்டுப்பாடும் இங்கு இல்லை. அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் தற்போது கையிருப்பில் இருக்கிறது" என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.35 வரை பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடுக்கு டீலர்கள்தான் காரணம் என்றும், அவர்கள் பெட்ரோலை பதுக்கி லாபம் பார்க்கிறார்கள் என்று ஆளும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்த அந்நாட்டின் பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் சமி கான், "பெட்ரோல் பற்றாக்குறை எங்களிடம் கிடையாது. எண்ணெய் விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து போதுமான அளவு எண்ணெய் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளனர். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலையுயர்வு, பணவீக்கம் ஆகியவை தற்போது பாகிஸ்தானில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இந்த நெருக்கடி குறைவாக இருந்தபோது அந்நாட்டு அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் கோரியிருந்தது. இது ஒன்பதாவது கடனாகும்.

கடன்

கடன்

ஆனால் இந்த கடனை வழங்க ஐஎம்எஃப் தயாராக இருந்தாலும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் அரசு தற்போதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே கடன் கிடைக்காமல் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நெருக்கடியும் முற்றி வருகிறது. இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானிடம் 3.67 பில்லியன் டாலர்கள் (ரூ.3 லட்சம் கோடி) அந்நிய செலாவணி மட்டுமே கையிருப்பில் இருக்கிறது. இது அடுத்த மூன்று வாரத்திற்கு கூட தாக்குப்பிடிக்காது. வெளிநாடுகளிலிருந்து சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி அவசியமாகும். ஒருவேலை இது தீர்ந்துவிட்டால் நாடு இலங்கையை போலவே மாறிவிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சேமிப்பு

சேமிப்பு

அரசு தரப்பில் சேமிப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தேவையில்லாமல் மின்சாரத்தை செலவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இரவு 10 மணிக்கு மேல் ஷாப்பிங் மால்கள், திருமண மண்டபங்களில் மின்சாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அதிகாரிகளுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட அளவு நிதி சேமிக்கப்படும் என்று அரசு கூறியிருக்கிறது. எப்படி இருந்தாலும், IMF வழங்கும் நிதிதான் இந்த நெருக்கடியிலிருந்து பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+