கடலுக்கு அடியில் கம்பீரமாய் நிற்கும் சிலைகள்: வாவ், வவ்வாவ் படங்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் நீருக்கு அடியில் உள்ள பூங்காவில் அழகாக நிற்கும் சிலைகளை லண்டனைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் அருமையாக படம் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மெக்சிகோ மாநிலத்தில் எம்.யூ.எஸ்.ஏ. என்ற நீருக்கு அடியிலான பூங்கா ஒன்று உள்ளது. நீருக்கு அடியில் இருக்கும் பூங்காவில் பல அழகான சிலைகள் உள்ளன. அந்த சிலைகளை புகைப்படம் எடுக்கும் ஆசை லண்டனைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான கிளாடியா லெக்கீக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அந்த பூங்காவுக்கு சென்று தனது திறமையை காட்டியுள்ளார்.
சிலைகள்
இந்த பூங்காவில் உள்ள சிலைகளை ஜேசன் டி கெய்ர்ஸ் டெய்லர் என்பவர் உருவாக்கியுள்ளார்.
கான்குன்
மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கான்குன் என்ற கிராம மக்களை மனதில் வைத்து அந்த சிலைகளை வடித்துள்ளார் டெய்லர்.
சுற்றுலாப் பயணிகள்
கான்குன் பகுதி கடலுக்கு அடியில் இருக்கும் பவளப் பாறைகளை சுற்றுலாப் பயணிகள் நெருங்காமல் இருக்க இந்த பூங்கா உதவி செய்கிறது. அவர்கள் சிலைகளை பார்க்கும் ஆர்வத்தில் பவளப் பாறைகள் அருகில் செல்வது இல்லை.
சவால்
கடலுக்கு அடியில் உள்ள பூங்காவில் இருக்கும் சிலைகளை புகைப்படம் எடுத்தது சவாலாக இருந்தது என்று கிளாடியா தெரிவித்துள்ளார்.
கடினம்
நீருக்கு அடியில் இருக்கும் சிலைகளை தத்ரூபமாக புகைப்படம் எடுத்தது கடினமாக இருந்தது. ஏனென்றால் அனைத்து பக்கங்களில் இருந்து பார்க்கும் போது புகைப்படம் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கிளாடியா.


Click it and Unblock the Notifications
