மலேசிய கடற்கரையில் நிர்வாண விளையாட்டில் ஈடுபட்ட ஆண், பெண்களுக்கு போலீஸ் வலை
கோலாலம்பூர்: ஆண்களும், பெண்களுமாக சேர்ந்து நிர்வாணமாக விளையாட்டு போட்டிகள் நடத்தியசம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்றவர்களைபோலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
மலேசியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 18 பேர்ஒன்றிணைந்து பீனங்க் பகுதியிலுள்ள, பீச்சுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்றதன் நோக்கம்,சாப்பிட்டுவிட்டு, கடற்கரையோரமாக அமர்ந்து கதை பேசுவது கிடையாது.

கடற்கரையில் களியாட்டம்
மேற்கண்ட 18 பேரும், நிர்வாண விளையாட்டு போட்டிகளை நடத்தவே அந்த கடற்கரைக்கு சென்றுள்ளனர். திட்டமிட்டதைப் போலவே செய்தும் விட்டனர். ஆண்களும், பெண்களும் சேர்ந்து உடலில் ஒட்டு துணியும் இல்லாமல், கடற்கரைக்கு நடந்து சென்றுள்ளனர். இதில் 20 வயது மதிக்கத்தக்கபெண் மட்டும் மேலாடை இன்றி, கீழாடையாக கால்சட்டை மட்டும் அணிந்துள்ளார். கூச்ச சுபாவம் போலிருக்கிறது. அதைவிட வயது மூத்த மற்றவர்கள், பிறந்த மேனியாக காற்று வாங்கியுள்ளனர் கடற்கரையில்.

நிர்வாண விளையாட்டுகள்
இதுமட்டுமல்ல, திட்டமிட்டபடி நிர்வாண விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளனர். இந்தவிளையாட்டுகளில், நீச்சல், தொடர் ஓட்டப்பந்தையம், ஒருவருக்கொருவர் பிடித்தபடி நடப்பதுபோன்றவையும் அடங்கும். கடற்கரையில் தீ மூட்டி நிர்வாணமாக சுற்றிலும் வட்டமாக அமர்ந்துகதையடித்துள்ளனர் இந்த குழுவினர்.

இதுல பப்ளிசிட்டி வேறு...
இத்தோடு விட்டிருந்தால் கதை வெளியே தெரிந்திருக்காது. ஆனால் இந்த கூத்துக்களை போட்டோமற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் போட்டு, தங்கள் மகிழ்ச்சியைவெளிப்படுத்தியுள்ளனர். இது போலீசாரின் கவனத்துக்கு வந்துவிட்டது. மலேசியாவில் நிர்வாணவிளையாட்டு என்பதை தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

புகைப்படங்களை வெளியிட்ட போலீஸ்
எனவே இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். புகைப்படத்தில்13 பேர் முகங்கள் தெரிகின்றன. எனவே அவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில்வெளியிடப்பட்டுள்ளன. இதனிடையே விஷயம் பிரச்சினைக்குள்ளானதும், சமூக வலைத்தளங்களில்இருந்த வீடியோ, போட்டோக்கள் அகற்றப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications