பெட்டியை திறந்தா.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
6 அடி நீள வெள்ளை பாம்பை இளம்பெண் ஒருவர் போலீசில் ஒப்படைத்துள்ளார்.
நியூகாசில், இங்கிலாந்து: ஒரு அட்டை பெட்டி போலீஸ்காரர்களை எல்லாம் தலைதெறிக்க ஓடவிட்டிருக்கு.
இங்கிலாந்தின் நியூகாசில் பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு ஒரு பெண் ஒரு பெரிய அட்டை பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே வந்தார். அந்த அட்டை பெட்டியில் அங்கங்கே ஓட்டைகள் இருந்தன. பெட்டி பெரிதாக உள்ளவும் என்னமோ ஏதோவென்று, அங்கே இருந்த எல்லா போலீஸ்காரர்களும் அந்த பெண்ணின் அருகில் வந்துவிட்டனர்.

அட்டை பெட்டி
அங்கிருந்த போலீஸார்களுக்கு அந்த பெண்ணைவிட அந்த அட்டை பெட்டி மீதே கவனம் இருந்தது. அதற்குள் என்ன இருக்கும் என்று எல்லோருமே ஆர்வத்தில் அங்கு இருந்தனர். ஆனால் அங்கிருந்த ஒரு போலீஸ்காரருக்கு ஆர்வம் சற்று அதிகமாகவே, அப்பெண்ணிடம் என்ன, ஏதென்று கேட்டு அட்டைப் பெட்டியை வாங்கினார். கீழே வைத்து அவசர அவசரமாக திறந்து பார்த்தார். அவர் திறப்பதை பார்த்ததும் மற்றவர்களும் அட்டை பெட்டியை சுற்றிக் கொண்டனர்.

6 அடி நீளம்
அப்போது 6 அடி நீளத்தில் வெள்ளை நிறப் பாம்பு ஒன்று பெட்டிக்குள்ளிருந்து குபீரென்று வெளியே வந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் தலைதெறிக்க ஓட தொடங்கினர். இதனால் போலீஸ் ஸ்டேஷனே பரபரப்பானது. பிறகுதான் தெரிந்தது அது விஷமில்லாத பாம்பு என்று. அந்த பெண்ணிடம் கேட்டார்கள், "இதை எதுக்கும்மா இங்க தூக்கிட்டு வந்திருக்கே?" என்று.

பாவம் பாம்பு...
அதற்கு அந்த பெண், "நான் மதியானம் சாப்பிடலாம்னு தெருவில நடந்து போய்க்கிட்டு இருந்தேன். அப்போதான் இந்த பாம்பை பாத்தேன். பாவம், அது எங்க போறதுன்னு தெரியாமல் தவிச்சிட்டே இருந்தது. அதான், உங்ககிட்ட கொண்டுவந்து ஒப்படைக்கலாம்னு வந்தேன்" என்றார்.

காத்து வேணும் இல்லை?,
இதைக்கேட்ட போலீசார், "சரிம்மா.. அட்டை பெட்டில எதுக்கும்மா இவ்ளோ ஓட்டைகள்?" என கேட்டனர். அதற்கு அந்த பெண், "இல்லை... பெட்டிக்குள் இருக்கும் பாம்புக்கு காத்து வேணும் இல்லை? காற்று இல்லாமல் எப்படி உள்ளே இருக்கும். அதான் ஓட்டைகள் போட்டு கொண்டு வந்தேன்" என்றார்.

அல்பினோ பாம்பு
பின்னர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘அந்த வெள்ளை பாம்பு அல்பினோ என்ற விஷமில்லாத பாம்பு வகையை சேர்ந்ததாம். அதனால பெரும்பாலானோர் அதை வீட்டில் செல்ல பிராணிகள் போல வளர்க்கிறார்களாம். அப்படித்தான் யாரோ வளர்த்திருக்காங்க போல. தெரியாமல் தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறது. அதனால், வெள்ளை பாம்பின் உரிமையாளர் யார் என கண்டுபிடித்து பாம்பை அங்கே சேர்த்திடுவோம்" என்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications