போர் வேண்டாம்... முதல் உரையில் உலக நாடுகளுக்கு புதிய போப் ஆண்டவர் கொடுத்த மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன்: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிறுத்தம் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக புதிய போப் லியோ (Pope Leo XIV) கூறினார். புதிய போப்பாக நேற்று பொதுமக்கள் மத்தியில் தோன்றிய அவர், தனது முதல் உரையிலேயே, நாடுகளுக்குள் போர் வேண்டாம் என்றும் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்வால் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து புதியை போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் நடந்தனர்.

Pope Leo Pakistan War World

இதன்படி புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் "போப் லியோ 14" (Pope Leo XIV )என்று போப் ஆண்டவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். 69 வயதான இவர், கடந்த 9 ஆம் தேதி புதிய போப்பாக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து முதல் ஞாயிற்றுக்கிழமையான அவர் நேற்று பொதுமக்கள் மத்தியில் தோன்றி பேசினார்.

அப்போது அவர் தனது முதல் உரையிலேயே, இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், நாடுகளுக்குள் போர் வேண்டாம் என்றும் அவர் கூறினார். போப் கூறியதாவது:-

உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அதிக துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். அங்கு சீக்கிரம் அமைதி திரும்ப என்னென்ன செய்ய வேண்டும் அதனை செய்ய முயற்சிக்க வேண்டும். அங்குள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக காசாவில் நடக்கும் சம்பவங்கள் என்னை வருத்தமடைய செய்தது.

கூடிய விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சீக்கிரம் இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டு நல்ல ஒப்பந்தம் போடப்படும் என்று நம்புகிறேன். உலகில் அமைதி நிலவு இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+