"கும்மிருட்டில்" கீவ்.. அடுத்தடுத்து பாய்ந்த 120 ஏவுகணைகள்.. இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்.. ஏன்
ஏவுகணை தாக்குதல் காரணமாக கீவ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ் பகுதியில் 90 சதவீதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின.... உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.
எனவே, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் இந்த போரை தொடுத்தது... தாக்குதலை தொடுத்த ரஷ்யா, அடுத்த 2வது நாளே உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது..

உறுப்பு நாடுகள்
அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போகிறது.. இப்படி 2 தரப்பிலும் நடந்த தாக்குதலில் பெரிய அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.. உக்ரைனின் உள்கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கெர்சன் பகுதி
இந்த போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றினாலும், ரஷிய ராணுவம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில், அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டுவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில், உக்ரைனின் பல நகரங்களில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்திக்கொண்டே இருக்கிறது.. உக்ரைன் முழுவதும் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால், பெரும்பாலான பகுதிகளில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஏவுகணை தாக்குதல்
குறிப்பாக கீவ் பிராந்தியம் மற்றும் தலைநகரம், எல்விவ் பகுதி, ஒடெசா மற்றும் பிராந்தியம், கெர்சன் மற்றும் பிராந்தியம், வின்னிட்சியா பகுதி மற்றும் டிரான்ஸ்கார்பதியா ஆகிய பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.. முழுவீச்சுடன் ரஷியா ஏவுகணை தாக்குதல்களை வருவதால், அவர்களின் ஏவுகணைகள் குறைந்துவருகிறது என்றும் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியின் செயல்பாடுகள் ரஷியாவிற்கும் அதன் குடிமக்களுக்கும் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறி தாக்குதல்
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 120 ஏவுகணைகளை கொண்டு உக்ரைனை ரஷ்யா தாக்கியுள்ளது.. இது குறித்து உக்ரைன் விமானப்படை சொல்லும்போது, உக்ரைனின் தலைநகரம், கிழக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா 120 ஏவுகணைகளைகொண்டு தாக்கியுள்ளது... உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளது..

கும்மிருட்டு
அதாவது, ரஷியா கடல் வழியாகவும், வான் வழியாகவும் சரமாரியாக இந்த 120 ஏவுகணைகள் செலுத்தி, உக்ரைனில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.. இதன் காரணமாக, கீவ் நகரின் 40 சதவீத மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருட்டில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்சிக்கோ உறுதி செய்துள்ளார்.. மேலும், போலந்து எல்லையின் அருகே உள்ள நகரங்களான லிவிவ், கார்க்கிவ் ஆகியவைகள் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கி உள்ளன அந்த நகரங்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications