இந்தோனேசியாவை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜகார்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவு, பலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.5 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. ராட்ஷத கடல் அலைகள் ஆக்ரோஷமாக 10 அடிக்கு மேல் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் மாயமாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், இந்தோனேசியாவில் பேரழிவு ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications