நம்பர் 1 கார்ல்சனை திணறடித்த பிரக்ஞானந்தா.. “சாம்பியன் யார்?”.. டை பிரேக்கர் ஸ்பெஷலிஸ்ட்டாம்! ஆஹா!
பாகு: இந்தியா நேற்று சந்திரனில் 'சந்திரயான் - 3' விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியாவுக்கு இன்னொரு பெருமித தருணம் நிகழுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இன்று நம் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி யுத்தம் நடத்துகிறார்.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் சவால் விடுத்து வருகிறார் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றும் டிரா ஆகியுள்ளது.

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கால்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா மோதி வருகின்றனர். இரண்டு சுற்றுகளை உள்ளடக்கிய இந்த போட்டியில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிரா ஆனது. 35 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சன் - பிரக்ஞானந்தா இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) இரண்டாவது சுற்று நடைபெற்றது. இதில் கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டியிலும் கார்ல்சனுக்கு கடும் சவாலை அளிக்கும் விதமாக விளையாடினார் பிரக்ஞானந்தா. இந்த ஆட்டத்தின் 11வது நகர்த்தல்களுக்குள் ராணிகளும், குதிரைகளும் வெட்டுப்பட்டு வீழ்ந்தன.
30 காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த போட்டியானது டிரா ஆனது. டிரா ஆனதால் இருவருக்கும் தலா அரை பாயிண்ட் வழங்கப்பட்டது. இரு சுற்று ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா ஆன காரணத்தால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். டை பிரேக்கர் ஆட்டத்தில் இருவரும் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும். இந்த ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும், இந்தச் சுற்றில் மிக வேகமாக சமயோசிதமாக ஆடுபவருக்கே வெற்றி கிடைக்கும்.
முன்னதாக, அரைஇறுதியில் பிரக்ஞானந்தா டை பிரேக்கரில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் நம்பர் 3 வீரர் பேபியானா காருவானாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அந்தவகையில், இன்றைய டை பிரேக்கர் ஆட்டத்திலும் பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு டஃப் கொடுப்பார். அதேசமயம், கார்ல்சனும் சளைத்தவர் அல்ல, ரேபிட் ரவுண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆன கார்ல்சன், உளவியல் ரீதியாக பிரக்ஞானந்தாவை சாய்க்க முற்படுவார். என்ன நடக்கிறதென்று இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications