ரஷ்யாவில் கிடைத்த உற்சாக வரவேற்பு.. பிரதமர் மோடி - புதின் சந்திப்பு.. ஆலோசிக்கப்போவது என்ன?
மாஸ்கோ: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியின் ரஷ்ய சுற்றுப்பயனம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. புதின் - மோடி இடையே நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் இன்று மோடிக்கு இரவு உணவு விருந்தை புதின் அளிக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார். இந்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாட்கள் பயணமாக புறப்பட்டு சென்றார்.

மோடிக்கு உற்சாக வரவேற்பு: ரஷ்ய பயணத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட கால நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்ககள்.
அந்த வகையில் இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி - புதின் சந்திப்பு: மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதையும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளர். இந்த சந்திப்பின் போது உக்ரைன் போர், இரு நாட்டு வர்த்தகம், கச்சா எண்ணெய் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படலம் என கூறப்படுகிறது.
இரவு உணவு விருந்து: புதினை பிரதமர் மோடி நாளை சந்தித்து பேச உள்ள நிலையில் இன்று இரவு உணவு விருந்தை மோடிக்கு அளிக்கிறார் புதின். இதற்காக ரஷ்ய அதிபர் இல்லம் சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி புதின் வரவேற்றார். பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை சர்வதேச நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மோடியின் பயணத்தை பார்த்து பொறாமை படுவதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை இன்று கூறியிருந்தது.
உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்யா மீது உக்ரைன் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல முறை புதினுடன் பேசியுள்ள மோடி, இந்த யுகம் போருக்கானது இல்லை என்று வலியுறுத்தியிருந்தார்.
மோடி ட்வீட் பதிவு: இந்த நிலையில் தான் மோடியின் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ரஷ்யா சென்றதும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இரு நாடுகளுக்கு இடையேயான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications