சிறைச்சாலையை முற்றுகையிட்ட மாணவர்கள்.. கைதிகள் தப்பி ஓட்டம்! வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து, ஏராளமான கைதிகளை விடுத்திருக்கின்றனர். இதனால் அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது.

முன்பு பாகிஸ்தானுடன் இருந்த வங்கதேசம், இந்தியாவின் உதவியால் கடந்த 1971ம் ஆண்டில் விடுதயைடைந்தது. இப்போது அந்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள் இந்திய சட்டங்களை போன்றது போலவே இருக்கும். இடஒதுக்கீடு கூட இந்தியாவை போன்றே அங்கும் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Bangladesh Jail Dhaka

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.

இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக சென்றுவிடுவது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.

இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.

இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிறைச்சாலையை முற்றுகையிட்டு அங்குள்ள கைதிகளை விடுவித்துள்ளனர். நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான சிறை கைதிகள் தப்பி சென்றுள்ளதாகவும், சிறைச்சாலையின் பல இடங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+