டெல்லியில் களமிறக்கப்பட்ட ஸ்னைப்பர்! வெடிகுண்டை தாங்கும் கவச கார்! புதினுக்கு உச்சபட்ச பாதுகாப்பு
டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் இன்றைய தினம் இந்தியா வரும் நிலையில், அவருக்கு உச்சபட்சப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி அதிரடிப் படையினர், சுழல் துப்பாக்கி வீரர்கள், ட்ரோன்கள், ஜாமர்கள் மற்றும் ஏஐ என பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. ரஷ்ய அதிபர் புதினுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் அதிபர் புதின் உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்படும் தலைவராக இருக்கிறார். அவருக்கு ரஷ்யாவுக்கு உள்ளேயும் சரி, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் சரி, அதிகபட்சப் பாதுகாப்பு தரப்படும். அவர் தான் புதின் இப்போது இந்தியா வருகிறார். இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் இன்று மாலை டெல்லி வந்தடைகிறார்.

ரஷ்ய அதிபர் புதின்
புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து கொடுப்பார் எனச் சொல்லப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை புதின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டிலும், பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் இரவு விருந்திலும் அவர் கலந்துகொள்வார்.
இந்த முழு பயணத்திலும் புதினுக்கு பாதுகாப்பு கொடுக்க உச்சபட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 40+ ரஷ்ய பாதுகாப்புப் படையினர் இதற்காக முன்கூட்டியே டெல்லிக்கு வந்துள்ளனர். இவர்கள் டெல்லி போலீஸ் மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ரஷ்ய அதிபரின் கான்வாய் செல்லும் அனைத்து ரூட்களையும் இந்த டீம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
டிரோன் மூலம் கண்காணிப்பு
ரஷ்ய அதிபரின் கான்வாய் தொடர்ந்து டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். இதற்காகச் சிறப்புக் கட்டுப்பாட்டு மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி டிரோன் காட்சிகளை ஸ்பெஷல் டீம் நேரடியாகவே கண்காணிக்கும். மேலும், புதின் செல்லும் வழியில் பல இடங்களில் ஸ்னைப்பர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜாமர்கள், ஏஐ கண்காணிப்பு மற்றும் பேஸ் ரெகக்னிஷன் கேமராக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் புதின் வந்திறங்கிய உடனேயே அவரை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்படும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவொரு தவறும் நடக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும்.
பாதுகாப்பு
என்எஸ்ஜி மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் அவுட்டர் லேயர் பாதுகாப்பைக் கவனிப்பார்கள். ரஷ்ய அதிபரின் பாதுகாப்புப் பிரிவு இன்னர் லேயர்களை கண்காணிக்கும். ரஷ்ய அதிபர் பிரதமர் மோடியுடன் இருக்கும்போது, இந்தியச் சிறப்புப் பாதுகாப்புக் குழு, அதாவது எஸ்பிஜி கமாண்டோக்களும் இன்னர் லேயர் பாதுகாப்பில் இணைவார்கள். புதின் தங்கும் ஹோட்டல்களும் முழுமையான கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆரஸ் செனாட் கார்
புதினின் பாதுகாப்பின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று என்றால் அது அவரது ஆரஸ் செனாட் (Aurus Senat) எனப்படும் அதிநவீனக் கவச கார் தான்.. இதை ஆங்கிலத்தில் 'fortress-on-wheels', அதாவது நகரம் கோட்டை என்றே சொல்வார்கள். புதின் இந்தியா பயணத்திற்காக, இந்த செனாட் கார் மாஸ்கோவிலிருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. இந்தியா என்று இல்லை.. புதின் எந்த நாட்டிற்குப் போனாலும் கையோடு இந்தக் காரை எடுத்துச் சென்றுவிடுவார்கள். எப்போதும் இந்த காரில் தான் பயணிப்பார்.
2018 முதலே புதின் இந்தக் காரை தான் பயன்படுத்துகிறார். ரஷ்யாவை சேர்ந்த ஆரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்த செனாட் கார் உருவாக்கப்பட்டது. இதில் வெடிகுண்டு தாக்குதல்களையும் கூட தாங்கும் அளவுக்கு வலிமையானதாகும்.












Click it and Unblock the Notifications