கொரோனா கண்காணிப்பு முகாம் ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளுக்குள் சிக்கியதால் பரபரப்பு
பெய்ஜிங்: கொரோனா கண்காணிப்பு முகாமாக ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3097 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவில் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 6 மாடிகள் கொண்ட ஹோட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்தது. கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த ஹோட்டல் நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. ஓட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#突发 刚刚泉州南环路欣佳酒店倒塌,伤亡情况不明,据消息说为指定隔离酒店。躲得过病毒也躲不过豆腐渣工程。档锅总有一种死法安排你。 pic.twitter.com/Ys60THDoXD
— 默默 (@zixinho17) March 7, 2020
இதையடுத்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்புக் குழுவினர் மாஸ்க் அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஹோட்டல் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 80 அறைகள் உள்ளன. அந்த அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications