For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைன் போர்! கடும் கோபத்தில் புதின்.. கையில் எடுக்கும் அடுத்த ஆயுதம் இதுவா! மிரண்டுபோன ரஷ்ய ராணுவம்

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டில் 2 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Russia Ukraine போர்! கோபத்தில் Putin! | OneIndia Tamil

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

    இருப்பினும், உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷ்யாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது.

    40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்! ‛கீவ் நகரின் பேய்’ என புகழப்பட்டவர் இறந்தது எப்படி40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன் வீரர் மரணம்! ‛கீவ் நகரின் பேய்’ என புகழப்பட்டவர் இறந்தது எப்படி

     உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    முதலில் பிப். இறுதியில் இந்தப் போர் தொடங்கிய போது, யாரும் போர் இவ்வளவு நாட்கள் நீட்டிக்கும் என எதிர்பார்க்கவில்லை. போர் சில நாட்களில் முடிந்துவிடும், உக்ரைன் சரணடைந்துவிடும் என்றே பலரும் கருதினர். அதற்கு நேர்மாறாக உக்ரைன் வீரர்களின் துணிச்சலால் ரஷ்யப் படைகளால் பல பகுதிகளில் முன்னேற முடியாத சூழல் கூட ஏற்பட்டது. இதன் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

     அதிபர் புதின்

    அதிபர் புதின்

    இந்தப் போருக்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் போதிலும், இது போர் இல்லை சிறப்பு நடவடிக்கை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதனிடையே உக்ரைன் நாட்டில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் வகையில், சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற வார்த்தையைக் கைவிட்டு, உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை ரஷ்ய அதிபர் புதின் அறிவிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

     போர் அறிவிப்பு

    போர் அறிவிப்பு

    வரும் மே 9ஆம் தேதி நடைபெறும் வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்யா ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அதிபர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்படிச் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற வார்த்தையை விடுத்துவிட்டு முழு வீச்சிலான போரை அறிவித்தால், அது உக்ரைன் நிலைமையை மாற்றக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

     என்ன வித்தியாசம்

    என்ன வித்தியாசம்

    முழு வீச்சிலான போரை அறிவிக்கும் போது, ரஷ்ய அரசால் நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடியும். அதேபோல கூட்டணி நாடுகளின் உதவியைக் கோர முடியும். ரஷ்ய மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியும். டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் இதுவரை மிகக் குறைந்த அளவே முன்னேறி உள்ளதாக நம்பப்படுகிறது. இப்படி போரில் ரஷ்யாவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதே ரஷ்யா ராணுவத்திற்கு அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்துத் தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளியுள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ரஷ்யப் படைகள் தொடர்ந்து உக்ரைன் அப்பாவி மக்களைக் கொன்று வருவதால் இந்த அமைதி பேச்சுவார்த்தை விரைவில் முடிய வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டில் இருக்கும் பயிர்களையும் ரஷ்யா எடுத்துச் செல்வதாக ஜெலன்ஸ்சி சாடியுள்ளார்.

    விவசாயம்

    விவசாயம்

    உலக அளவில் தானியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக உக்ரைன் உள்ளது. ரஷ்யா போர் காரணமாக அதன் தானிய ஏற்றுமதி வெகுவாக குறைந்தது. இதன் காரணமாகச் சர்வதேச அளவில் தானிய விலைகளும் கிடுகிடுவென ஏறியது. இந்த தானிய பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் அது பல நாடுகளில் தானி பற்றாக்குறையை ஏற்படுத்தும் ஆபத்தும் கூட உள்ளது.

    English summary
    Russian President Vladimir Putin may soon drop the term special operation and declare all-out war on Ukraine: (உக்ரைன் போரில் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஷ்ய அதிபர் புதின்) Russia Ukraine war latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X