இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி காஷ்மீர் பற்றி விவாதித்த இங்கிலாந்து நாடாளுமன்றம்!
லண்டன்: இந்தியாவின் மிகக் கடுமையான எதிர்ப்பையும் மீறி இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் காஷ்மீ பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது உலக அமைதிக்கு மிகவும் இன்றியமையாதது என்றும் இந்த விவாதத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர பிரச்சனை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாது காஷ்மீரில் நிலவும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற குழு அறையில் விவாதம் நடைபெற்றது.
தீர்வு அவசியம்
இந்த விவாதத்தை தொடங்கி வைத்த லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி., டேவிட் வார்டு கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது உலக அமைதிக்கு மிகவம் இன்றியமையாதது.
போர்வெடிக்கும்
இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத வரையில், இந்தியா பாகிஸ்தானிடையே எந்நேரமும் போர் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீர் மீது அக்கறை தேவை
தற்போது காஷ்மீரில் கடுமையான மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் காஷ்மீர் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
காஷ்மீரில் முறையாக தேர்தல்
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சரும் இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவருமான கிரகோரி பார்கர், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகள் அமலில் உள்ளன. அங்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு அங்கம்
61% மக்கள் தேர்தலில் பங்கெடுத்து தங்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒரு அங்கமாக காஷ்மீர் உள்ளது.
இந்தியாவுடன் நிற்க வேண்டும்
இந்நிலையில், இதில் நாம் தலையிடுவது எந்த ஒரு பலனையும் தராது. பயங்கரவாதத்தால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவுடன் இங்கிலாந்து தோளோடு தோளாக நின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட வேண்டும் என்றார்.
கண்டனம்
இந்த விவாதமும் இங்கிலாந்தில் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் உருவாக்கிவிட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து போவதால் ஏற்படும் இழப்புகளை சரிகட்ட வழியைப் பார்க்க வேண்டிய இங்கிலாந்துக்கு காஷ்மீரம் பற்றி எதற்கு பேசி வாங்கிக் கட்ட வேண்டுமோ?












Click it and Unblock the Notifications