ரியோ ஒலிம்பிக்ஸ் : தங்கமகன் அபிநவ் பிந்த்ரா தலைமையில் அணிவகுத்து சென்ற இந்திய வீரர்கள்
ரியோ : ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழாவில், ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை துப்பாக்கி சுடும் வீரர் தங்கமகன் அபினவ் பிந்த்ரா தலைமையேற்று அணிவகுத்து சென்றார்.
ரியோ ஒலிம்பிக் ரியோ டி ஜெனிரோவில் கோலாகலமாக தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நடைபெற்று வரும் மரக்கானா மைதானத்தில் ஐ.நா.பொது செயலாளர் பான்கி மூன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென் அமெரிக்காவின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒலிம்பிக் கமிட்டியில் இந்திய உறுப்பினர் நீடா அம்பானி கலந்து கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டு வீரர்கள் முதலில் கொடி அணிவகுப்பு நடத்தினர். போர்ச்சுக்கள் மொழி அகர வரிசைப்படி கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இப்பட்டியலில் இந்தியா 95வது இடத்தில் உள்ளது. இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர்களை துப்பாக்கி சுடும் வீரர் தங்கமகன் அபினவ் பிந்த்ரா தலைமையேற்று அணிவகுத்து சென்றார்.
Abhinav Bindra leads the Indian Contingent at the #OpeningCeremony of the #Rio2016 pic.twitter.com/GcZDL2gGRp
— ANI (@ANI_news) August 6, 2016
அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டு வீரர்கள் குழுவிற்கு மைகெல் பெல்ப்ஸ் கொடியை சுமந்து வழிநடத்தி சென்றார்.
ஸ்பெயின் வீரர்களை ரபேல் நடால் கொடியை சுமந்து வழிநடத்தி சென்றார்.
டென்மார்க் வீரர்களை கரோலின் ஹோஸ்னியாக்கி வழிநடத்தினார் இங்கிலாந்து வீரர்களை ஆண்டி முர்ரே வழிநடத்தினார். கிரிபாட்டி வீரர்களை காமெடி நடனத்துடன் டேவிட் கடோடு வழிநடத்தினார். இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசியாக அணிவகுப்பில் இடம் பெற்றது. அதற்கு முன்பாக அகதிகள் அணி அணிவகுத்து சென்றது.












Click it and Unblock the Notifications