இன்னும் 20 வருடங்களில் 35 சதவீதம் ரோபோக்கள்தான் - வேலை போகும் நிலையில் லண்டன்வாசிகள்!
லண்டன்: உலகில் இன்னும் இருபது ஆண்டுகளில் 35 சதவீத பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் என்று ஆய்வில் அபாய தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2035 ஆம் ஆண்டுக்குள் முப்பத்தைந்து சதவீத பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் போன்றோரின் வேலைகளுக்கு ரோபோக்கள் வராது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை பறிபோகும் அபாயம்:
விற்பனை, கட்டுமான மற்றும் கணக்குப்பதிவு போன்ற துறைகளில் தற்போது பணிபுரிவோரின் வேலைகளை ரோபோக்களே செய்ய வேண்டி வரும் என்பதால் அத்துறையில் உள்ளவர்களது வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
செய்ல்பாடு அவசியம்:
இது ஒருபக்கம் புதிய வேலைவாய்ப்புகளையும், மறுபக்கம் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவ்வாறு நிஜமாகவே நடக்கும்போது வேலையிழப்பைத் தடுக்கவில்லை என்றால், கல்வியாளர்களும், நாட்டின் செயல் திட்டங்களை வடிவமைப்போரும் இதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்.
அட்டவணை வெளியீடு:
பிரபல பி.பி.சி. நிறுவனம் எந்தெந்த வேலைகள் ரோபோக்கள் செய்யலாம் அல்லது செய்யாது என்கிற அட்டவணை வெளியிட்டுள்ளது.
ரோபோக்கள் உலகம்:
அதன்படி தொலைபேசி மூலம் விற்பனை, டைப்பிஸ்ட், சட்டத்துறைச் செயலர், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணிகள் ரோபோக்களின் வசம்போக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
அறிவு வளர்த்துக் கொள்ளுங்கள்:
இது இங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நடைமுறையாக வாய்ப்பிருப்பதால், நாமும் பல்வேறு துறைக்கான அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications