ருமேனியா நைட் கிளப்பில் பயங்கர தீ 26 பேர் பலி; 150 பேர் படுகாயம்
புக்கரெஸ்ட்: ருமேனியாவில் நேற்று இரவு நிகழ்ந்த தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ருமேனியா நாட்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று இரவு ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற இரவு விருந்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையின் போது திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியாயினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அந்நாட்டு துணை உள்துறை அமைச்சர் ரீட் அரபாத் கூறுகையில், திடீர் என தீ பற்றிக் கொண்டதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதனால் விடுதிக்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டினர் எனவும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் துணை பிரதமர் கேப்ரியல் கூறுகையில், ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இரத்த தானம், அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications