கதவுக்கு முட்டுக்கொடுக்க கல்லை வைத்த பெண்.. அதன் மூலமே கோடீஸ்வரனான குடும்பம்! அது எப்படி தெரியுமா?
புக்கரெஸ்ட்: பொதுவாக அதிஷ்டம் யாருக்கு எப்படி அடிக்கும் என்றே தெரியாது. இங்கு அப்படி தான் ஒரு பெண்ணுக்கு மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. வீட்டின் கதவுக்கு முட்டுக்கொடுக்க வைத்திருந்த கல், ஒரு பெண்ணின் குடும்பத்தையே கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. அந்த கல் அவ்வளவு மதிப்புமிக்கதாக மாறியது எப்படி! அதற்கு காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் உள்ள நாடு ருமேனியா. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே சுமார் 1.91 கோடி தான். அங்கு வசிக்கும் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக கதவுக்கு முட்டு கொடுக்க ஒரு கல்லை பயன்படுத்தி வந்துள்ளார். 3.5 கிலோ எடை கொண்ட அந்த கல் மூலமாகே அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்பதை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ஏனென்றால் அது உண்மையில் கல் இல்லையாம். அது அம்பர் துண்டுகளில் ஒன்றாகும். சந்தையில் அதன் மதிப்பு சுமார் $1.1 மில்லியன் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.42 கோடியாகும்.
அதென்ன அம்பர்
அதென்ன அம்பர்.. அதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு மவுசு என நீங்கள் கேட்கலாம்.. புதைபடிவ மர பிசினை தான் அம்பர் என குறிப்பிடுவார்கள். மரங்களில் இருந்து வெளியாகும் பிசின் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்போது அது மெல்ல தடிமனாக மாறி கல்லை போல மாறிவிடும். அது பார்க்க கல் போல தெரிந்தாலும் அது உண்மையில் மரத்தின் பிசின். இந்த அம்பர்கள் அதன் தனித்துவமான நிறத்திற்கு பெயர் போனவை. இந்த ருமேனியா நாட்டை சேர்ந்த பெண் கண்டுபிடித்த அம்பர் செழுமையான சிவப்பு நிறங்களுக்கு பெயர் பெற்ற ஒரு வகை ருமனைட் வகை அம்பர் ஆகும்.
எவ்வளவு பழமையானது
அந்த பெண்ணிடம் இருக்கும் அம்பர் குறித்து தெரிந்ததும், அதை அங்குள்ள வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஆய்வாளர்கள் அதை சோதனை செய்த போது, அது அம்பர் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும், அது 38.5 மில்லியன் முதல் 70 மில்லின் ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டனர்.
இது தொடர்பாக அம்பர் இப்போது வைக்கப்பட்டுள்ள புசாவ் மாகாண அருங்காட்சியகத்தின் இயக்குனர் டேனியல் கோஸ்டாச் கூறுகையில், "இது மிகவும் அரிதானது. எங்கள் அருங்காட்சியகத்திற்கு மட்டுமில்லை.. அறிவியல் ஆய்வுக்கும் இது முக்கியமானதாக இருக்கிறது. பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதால் இது பல வழிகளில் நமக்கு உதவும்" என்றார்.
ஏன் மதிப்பு அதிகம்
உலகில் பல அம்பர்கள் இருந்தாலும், இந்தளவுக்கு பெரிய அம்பர் வேறு எங்கும் காணப்படுவதில்லை. உலகில் காணப்படும் மிக பெரிய அம்பராக இருப்பதாலேயே இதன் மதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த அம்பர் பார்க்க ரத்தின கல் போல இருக்கும். அதன் தனித்துவமான நிறமே இதை மதிப்புமிக்கதாக மாற்றுகிறது.
பொதுவாகவே அம்பர் விலைமதிப்பற்றது என்பதால் கொள்ளையர்கள் இதை திருடுவது வழக்கம். பல ஆண்டுகள் இது கதவை முட்டுக்கொடுக்க பயன்பட்ட போதிலும், அது திருடப்படாமல் இருந்தது ஆச்சிரியம் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த பெண் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்த அம்பரை விற்றுவிட்டனர். அதன் பிறகே அந்த அம்பர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications