ரஷ்யாவில் பஸ்ஸில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 'பிளாக் விடோ': 6 பேர் பலி, 28 பேர் காயம்
வோல்கோகிராட்: ரஷ்யாவில் பயணிகள் பேருந்தில் இஸ்லாமிய பெண் தற்கொலைப்படை தீவரவாதி தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 6 பேர் பலியாகினர், 28 பேர் காயம் அடைந்தனர்.
ரஷ்யாவின் வோல்கோகிராடில் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த நைடா ஆசியலோவா(30) என்ற இஸ்லாமிய தீவிரவாத பெண் தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்த பெண் உள்பட பேருந்தில் இருந்த 7 பேர் பலியாகினர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பேருந்தில் இருந்தவர்களில் பலர் மாணவர்கள்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பேருந்துக்கு பின்னால் வந்த காரில் இருந்த டாஷ்போர்டு கேமராவில் பதிவாகி உள்ளது.
தீவிரவாதி ஆசியலோவா தெற்கு ரஷ்யாவில் உள்ள வடக்கு காகசஸ் பகுதியைச் சேர்ந்தவர். அவர் 21 வயது முஸ்லிம் போராளியான டிமிட்ரி சோகோலோவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் அண்மையில் இஸ்லாத்தில் சேர்ந்தார். அவருக்கு தீராத நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகளை பிளாக் விடோஸ் என்று அழைப்பார்கள்.
அடுத்த ஆண்டு வின்ட்டர் ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றது. அந்த போட்டிகள் நடக்கும் சோச்சி என்ற இடத்தில் இருந்து 500 மைல் தொலைவில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications