Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛மோடியை விட நெருக்கம்’’.. வடகொரிய அதிபருக்கு சொகுசு காரை பரிசாக அனுப்பிய புதின்! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சொகுசு காரை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். ஐநா தடைகளை மீறி அவர் இந்த காரை அனுப்பி தங்கள் இருவருக்கும் இடையேயான நட்பை உலக நாடுகளுக்கு அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா.. இந்தியாவுடன் தொடர்ந்து நட்பு நாடாக இருந்து வரும் வல்லரசு நாடுகளில் முதன்மையானது. அமெரிக்கா கூட பல சந்தர்ப்பங்களில் நமக்கு எதிராக திரும்பி இருந்தாலும் கூட ரஷ்யா தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகிறது. மேலும் இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து தான் நாம் வாங்கி வருகிறோம்.

Russia President Vladimir Putin gifts luxury car to North korea president Kim Jong-un

இதனால் தான் பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பந்தம் என்பது எப்போதும் உன்னதமான நிலையில் உள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகும் இந்த உறவு சிறிதும் மாறாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

இந்த போர் தொடங்கியது முதல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட பல நாடுகள் கூறியும் ரஷ்யா கேட்காமல் போரை தொடங்கியது. இந்த சமயத்தில் அனைத்து நாடுகளும் இந்தியா கூறினால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிச்சயம் போரை கைவிடுவார். பிரதமர் மோடி நிச்சயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பேச வேண்டும் எனக்கூறியதே இந்தியா-ரஷ்யா இடையேயான உறவின் உன்னதத்துக்கான உதாரணமாகும்.

இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் தற்போது நெருக்கம் காட்டி வருகிறார். தற்போது இவர்கள் 2 பேரின் உறவு என்பது மிகவும் முக்கிய இடத்துக்கு சென்றுள்ளது. அதாவது விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‛ஆரஸ்' எனும் சொகுசு காரை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இந்த கார் வடகொரியா சென்றுள்ளது. இந்த காரை இனி கிம் ஜாங் உன் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியா என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறது. ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு அமெரிக்காவுக்கே சவால் அளித்து வருகிறது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடைகள் உள்பட பல தடைகள் உள்ளது. ஐநாவும் தடைகளை அமல்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் தடைகளை தாண்டி விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சொகுசு காரை அனுப்பி உள்ளார்.

இந்த கார் கிடைத்த நிலையில் கிம் ஜாங் உன்னின் சகோதரி, விளாடிமிர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பரிசு என்பது இருதலைவர்கள் இடையேயான உறவை உன்னத நிலைக்கு எடுத்து செல்லும் எனக்கூறி அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்னுக்கு கார் அனுப்பிதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்தியா எந்த பொருளாதார தடையையும் ரஷ்யா மீது விதிக்காத நிலையில் போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் வடகொரியா அப்படியில்லை. ரஷ்யாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிம் ஜாங் உன்-விளாடிமிர் புதின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து இருவரும் மிகவும் நெருக்கமாகி உள்ளனர். ரஷ்யா, வடகொரியா ஆகியோர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் எதிரிகளை சமாளிக்க இருநாடுகளும் ஒன்றாக இணைந்துள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யா சென்ற கிம் ஜாங் உன், உக்ரைனை் போருக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக புதினிடம் வாக்குறுதி அளித்துள்ளார். போரில் ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வரும் நிலையில் அதற்கு பதிலடியாக கிம் ஜாங் உன் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மேலும் ரஷ்யா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூறின. அதோடு உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்யாவுக்கு, வடகொரியா ஆயுத சப்ளை செய்ததாக சேட்டிலைட் போட்டோக்களை அமெரிக்கா வெளியிட்டு இருந்தது. இதனால் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியா அனுப்பிய நிலையில் அதற்கு கைமாறாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த சொகுசு காரை வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் ரஷ்யா-வடகொரியா இடையேயான உறவை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+