சந்தேகப்படுறீங்களா.. 10 நாட்கள் வெயிட் பண்ணுங்க.. 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிரடி!
மாஸ்கோ: 'ஸ்பூட்னிக் வி' என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியின் மூன்றாம் கட்டம் 7-10 நாட்களில் தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
'
உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இதுவரை 2.18 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.73 லட்சம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நான்கு நாடுகள் பட்டியலில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது. ரஷ்யா மொத்தம் 917,884 பேருக்கு தொற்று பாதித்துள்ளது, இதில் 15,617 பேர் பலியாகிவிட்டனர். 729,411 பேர் குணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பதால் ரஷ்யா, கொரோனா பரவலை தடுக்க மருத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.
Recommended Video
ரஷ்ய சுகாதார அமைச்சத்தின் கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதை ஆகஸ்ட் 12ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் அறிமுகம் செய்து வைத்தார். முதல்கட்டமாக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க தனது மகளுக்கு அந்த தடுப்பூசியை போட்டார்.

இறுதிகட்ட ஆராய்ச்சி
1957 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் ஏவப்பட்ட விண்வெளி செயற்கைக்கோளின் பெயரிடப்பட்ட ஸ்பூட்னிக் வி என்ற பெயரில் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது, இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட ஆராய்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மக்கள் மிகுந்த ஆர்வம்
கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, "திங்களன்று (இன்று), பதிவுக்கு பிந்தைய ஆராய்ச்சி குறித்த நெறிமுறையின் முதல் பதிப்பை நாங்கள் முன்வைப்போம். பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளின் இந்த மிகுந்த ஆர்வத்தையும் கவனத்தையும் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் இந்த செயல்முறையை தாமதப்படுத்தாது, ஒரு வாரத்திற்குள் நெறிமுறைக்கு ஒப்புதல் அளிக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் அதிகபட்சம் எல்லாம் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.

முதல் தொகுதி தடுப்பூசி
மூன்றாம் கட்டத்தில் பல பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.. இந்த ஆய்வு மாஸ்கோ பிராந்தியத்தில் நடத்தப்படும்" இவ்வாறு கூறினார். இதற்கிடையில், கெரோனவுக்கு எதிரான முதல் தொகுதி தடுப்பூசிகளை ரஷ்யா தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அதன் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி குறித்த சந்தேகம்
ரஷ்யா தனது சொந்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டவுடன் மற்ற நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்கும் என்று சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ புதன்கிழமை தெரிவித்தார், தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications