For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவில் குண்டுமழை! திடீரென ஆக்ரோஷமான ரஷ்ய ராணுவம்! ஓயாத தாக்குதலால் உக்ரைன் மக்கள் திக்திக்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

Recommended Video

    Ukraine மீது திடீரென தாக்குதலை தீவிரப்படுத்திய Russia ராணுவம்

    கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. அதன்படி உக்ரைன் பகுதியின் வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதலை ஆரம்பித்தது.

    சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது

    ஒரு மாதத்தைக் கடந்தும் இந்தப் போர் தொடரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

     உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உக்ரைனில் இருந்து பல ஆயிரம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையிலும், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

     திடீர் தாக்குதல்

    திடீர் தாக்குதல்

    இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், ரஷ்யாவின் முக்கிய போர்க் கப்பல் உள்ளிட்ட பல ரஷ்ய இலக்குகளைக் குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாகவும் ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் மற்றும் உக்ரைன் தளங்களைக் குறி வைத்து இரவு முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

     ரஷ்ய விமானப் படை

    ரஷ்ய விமானப் படை

    விமானப்படை, ஏவுகணைகள், பீரங்கி பயன்படுத்தி உக்ரைன் நாடு முழுக்க நூற்றுக்கணக்கான இலக்குகளை ரஷ்ய ராணுவம் தாக்கியது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய விமானப் படை நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 16 உக்ரைன் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஐந்து ராணுவ மையங்கள், ஒரு எரிபொருள் கிடங்கு மற்றும் மூன்று வெடிமருந்து கிடங்குகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

     ஸ்டிரைக் ட்ரோன்கள்

    ஸ்டிரைக் ட்ரோன்கள்

    கார்கிவ், சபோரிஜியா, டொனெட்ஸ்க் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளிலும், மைக்கோலேவ் துறைமுகத்திலும் தாக்குதலை நடத்தி உள்ளோம். ஒட்டுமொத்தமாக 108 இடங்களில் ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இது தவிர மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 12 உக்ரைன் ஸ்டிரைக் ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அழிக்கப்பட்டுள்ளன. லுஹான்ஸ்க், வின்னிட்சியா மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் உள்ள நான்கு ஆயுதக் கிடங்குகள் இஸ்கண்டர் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டுள்ளது.

     ரஷ்ய ராணுவம்

    ரஷ்ய ராணுவம்

    ரஷ்யப் பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே இரவில் 315 உக்ரேனிய ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டது. ரஷ்ய வான் அமைப்பைப் பயன்படுத்தி 3 உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள், இரண்டு MiG-29 போர் விமானங்கள் மற்றும் ஒரு SU-25 விமானம் வீழ்த்தப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Russia said it had launched mass strikes overnight on the Ukrainian military targets: (நள்ளிரவு நேரத்தில் உக்ரைன் ராணுவ தளங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல்) Russia's latest attack on Ukraine war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X