Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அணு ஆயுத பேரழிவு!" புதின் மீது கை வைத்தாலே குண்டு மழை ரெடியாக இருங்கள்.. ஓப்பனாக எச்சரிக்கும் ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரத்தில் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.. இதனிடையே புதின் நெருங்கிய நண்பர் இது தொடர்பாக சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Putin எடுத்த சாட்டை | Belarus ஏன் முக்கியம்? | Russia Belarus Deal Explained | கதிகலங்கும் NATO & EU

    உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா இதைப் போர் என்று குறிப்பிடாமல் தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறுகிறது.

    இருப்பினும், உலக நாடுகள் அனைத்துமே இதைப் போராகவே கருதுகின்றனர். சமீப காலங்களில் நடந்த மிக மோசமான போர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் இதில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.

     சர்வதேச நீதிமன்றம்

    சர்வதேச நீதிமன்றம்

    இதனிடையே இந்த விவகாரத்தில் புதினுக்கு எதிராகக் கடந்த வாரம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. உக்ரைன் போரில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடு கடத்திய விவகாரத்தில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இதற்கு முழுக்க முழுக்க ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே காரணம் என்றும் கூறியிருந்தது. இருப்பினும், வழக்கம் போல எந்தவொரு போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் ரஷ்யா மறுத்துள்ளது.

     வெளிநாட்டிற்குச் சென்றால் கைது?

    வெளிநாட்டிற்குச் சென்றால் கைது?

    இருப்பினும், உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்ய அதிபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. இந்த சர்வதேச நீதிமன்றத்தில் மொத்தம் 123 உறுப்பு நாடுகள் இருக்கும் போதிலும் ரஷ்யா இதில் உறுப்பு நாடாக இல்லை. எனவே, இதற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேநேரம் உறுப்பு நாடுகளுக்குச் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, வெளிநாடுகளுக்கு புதின் செல்லும் போது அவர் கைதாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் புதின் வெளிநாட்டு பயணங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

     போர் பிரகடனம்

    போர் பிரகடனம்

    இதனிடையே வெளிநாட்டில் இருக்கும் போது, புதினை கைது செய்ய எந்தவொரு நாடு முயன்றாலும் அது ரஷ்யாவுக்கு எதிரான போர் பிரகடனமாகவே பார்க்கப்படும் என்று ரஷ்ய அதிபரின் நண்பரும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மீண்டும் உச்சமடைந்துள்ளது. ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நேரத்தில் அவர் இந்த முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

     டிமிட்ரி மெத்வதேவ்

    டிமிட்ரி மெத்வதேவ்

    இது குறித்து டிமிட்ரி மெத்வதேவ் மேலும் கூறுகையில், "புதினை கைது செய்ய எந்தவொரு நாடும் முயன்றாலும் கூட அவர்கள் மீது குண்டுகள் மழை பொழியத் தயங்க மாட்டோம்.. புதின் மீது கை வைப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள்.. அது ரஷ்யக் கூட்டமைப்பின் மீதான போர்ப் பிரகடனமாகவே இருக்கும். ஐசிசி என்ற இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாங்கள் உட்பட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் இதுவரை சொல்லத்தக்க வகையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததே இல்லை.

     குண்டு மழை

    குண்டு மழை

    உதாரணத்திற்குச் சொல்கிறேன். இது நடக்காது என்றாலும் உதாரணத்திற்குச் சொல்கிறேன்.. அணு ஆயுத ஆற்றல் கொண்ட நாட்டின் தலைவர் (ரஷ்யா அதிபர்) ஒரு இடத்திற்குச் செல்கிறார். ஜெர்மனி என்று வைத்துக் கொள்ளலாம். அங்கு அவர் கைது செய்யப்பட்டால் என்ன அர்த்தம். இது ரஷ்யக் கூட்டமைப்பின் மீதான போர்ப் பிரகடனமாக அர்த்தம்.. இப்படி நடந்தால் எங்கள் அனைத்து ஏவுகணைகளும் ஜெர்மனி அதிபர் மாளிகையை நோக்கிப் பறக்கும் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

     அணு ஆயுத பேரழிவு

    அணு ஆயுத பேரழிவு

    இந்தப் போரில் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலகின் பல நாடுகளும் உக்ரைனிற்கு உதவி வருகிறது. ஆயுதங்களை அனுப்பி வருகிறது. இது குறித்தும் பேசிய டிமிட்ரி மெத்வதேவ் கூறுகையில், உலக நாடுகள் ஒவ்வொரு நாளும் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவது.. மிக பெரிய அணு ஆயுத பேரழிவுக்கு நம்மை நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது, ரஷ்யாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று மேற்குலக நாடுகள் நினைத்தன. இருப்பினும், புதின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

     மேற்குல நாடுகள்

    மேற்குல நாடுகள்

    இதன் காரணமாகவே மேற்குல நாடுகள் புதின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இப்போது ரஷ்யாவை பலவீனமாக்கி காலி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.. ரஷ்யாவின் பரந்த இயற்கை வளங்களையும் திருட விரும்புகிறது. உக்ரைன் ரஷ்யாவின் ஒரு பகுதி. வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது, உக்ரைன் எப்போதும் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. வரும் காலத்தில் நிலைமை இரு தரப்பிற்கும் இடையே நிலைமை சீராகும் என்று நம்புகிறோம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+