கொரோனா தடுப்பு மருந்துக்கு... சுறா எண்ணெய்... கலிபோர்னியா அமைப்பு எதிர்ப்பு!!

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 லட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என்று சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

Shark Allies says sharks are killed to make Covid-19 vaccine

தற்போது மற்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த எண்ணெய் துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்க்கு இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், மருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு டன் ஸ்குய்லின் எண்ணெய் எடுப்பதற்கு 3000 சுறா மீன்கள் தேவைப்படுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் சுறா மீன் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், ''உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க 2,50,000 சுறா மீன்கள் தேவைப்படும். அதுவே, இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டும் என்றால், 5 லட்சம் சுறா மீன்கள் தேவைப்படும்.

கல்பர் மற்றும் பாஸ்கிங் சுறா மீன் வகைகளில் ஸ்குய்லின் எண்ணெய் அதிகளவில் இருக்கிறது. இதனால் இந்த மீன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்த வகை மீன்கள் அழிவும் வேகமாக நடந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த மீன்கள் இல்லை என்ற நிலையும் உருவாகலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.

சுறா மீன்கள் பயன்படுத்துவதற்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், ஸ்குய்லின் எண்ணெய்க்கு பதிலாக கரும்பை புளிக்க வைத்து அதில் இருந்து சிந்தெடிக் முறையில் எண்ணெய் எடுக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இது மட்டுமில்லை ஆண்டுதோறும் 30 லட்சம் சுறா மீன்களை கொன்று அதில் இருந்து காஸ்மெடிக் மற்றும் இயந்திரங்களுக்கான எண்ணெய் எடுக்கப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+