ஈரானில் நாடாளுமன்றம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்- 7 பேர் பலி!
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் எம்பிக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளனர்.
டெஹ்ரான்: ஈரானில் நாடாளுமன்றம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் கத்தார் நாட்டுடனான உறவுகளை துண்டிப்பதாக செளதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் பிரகடனம் செய்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் சமாதான முயற்சிகளை குவைத் முன்னெடுத்து வருகிறது. இதனால் அரபு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் நாடாளுமன்றத்துக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பல் இன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது. துப்பாக்கி முனையில் எம்பிக்கள் சிலரையும் பிணைக் கைதிகளாக அந்த கும்பல் சிறை பிடித்தது.
இதையடுத்து எம்பிக்களை மீட்க ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் எம்பிக்களை சிறைபிடித்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இத்தாக்குதல் நடந்த போதே டெஹ்ரானில் கொமேனி தர்கா மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தினர். இத்தாக்குதல்களில் 7 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
டெஹ்ரானில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications