சிங்கப்பூரில் இனி கார், பைக் வாங்குவது ரொம்ப கஷ்டம்!
போக்குவரத்து நெரிசலைக்குறைக்க புது திட்டத்தைக் அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார்களின் பயன்பாட்டைக் குறைக்க அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.
வளர்ந்து வரும் சிங்கப்பூர் நகரம் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மக்கள் பயங்கர போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதிய தீர்வொன்றை போக்குவரத்து இயக்குநகரம் அறிவிக்க இருக்கிறது. படிப்படியாக கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகளின் தனியார் பயன்பாட்டைக் குறைப்பதே அந்த புதிய ஐடியா.
சிங்கப்பூரில் வாகனங்கள் வாங்குவதற்கு ஏகக்கெடுபிடி இருந்தாலும், அங்கு வாகன விற்பனை அதிக அளவில் உள்ளது. டொயோட்டா கார் ஒன்றின் குறிப்பிட்ட மாடலின் சிங்கப்பூர் விலை அமெரிக்காவின் விலையை விட நான்கு மடங்கு அதிகம்.
இதனால், கார்களின் போக்குவரத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது அரசு. இதனை ஈடுகட்ட பொது போக்குவரத்தை ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் அதிகப்படுத்தும் துணைத்திட்டத்தையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே சிங்கப்பூர் நிலப்பரப்பில் 12% சாலைகள் ஆக்கிரமித்து உள்ளதால், தொழில்நுட்ப விரிவாக்கத்தைக் கணக்கில் கொண்டு சாலைகளைத் திட்டமிட வேண்டியுள்ளது.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் 28 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவு செய்து சாலை, மெட்ரோ போக்குவரத்து முறைகள் சீரமைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications