ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை பங்கேற்கிறார்
டோக்கியோ: 9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்றார். 23 ஆம் தேதி சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று பல்வேறு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் சிஇஒக்களை சந்தித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி தமிழகத்தில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததோடு, சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
அதேபோல் இன்று, சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு அமைச்சர் சண்முகத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
அப்போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே சண்முகம், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதுபற்றி ஒன்றிய அரசிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
ஒரு வார கால சுற்றுப்பயணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையம் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலினை இந்திய இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். நாளை மற்றும் நாளை மறுதினம் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். அங்கு ஜப்பானின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications