பெண் பத்திரிக்கையாளரால் காலை வாரிவிடப்பட்ட சிரிய அகதிக்கு ஸ்பெயினில் வேலை
மேட்ரிட்: ஹங்கேரி நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடுகையில் பெண் பத்திரிக்கையாளரால் காலை வாரி விடப்பட்ட நபருக்கு ஸ்பெயின் நாட்டில் கால்பந்து பயிற்சியாளர் வேலை கிடைத்துள்ளது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் ஏராளாமானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அப்படி சிரியாவில் இருந்து அகதியாக ஹங்கேரிக்கு வந்தவர் ஒசாமா அப்துல் மொஹ்சன்(52). சிரியாவில் கால்பந்து பயிற்சியாளராக இருந்த அவர் தன்னுடன் தனது மகன்கள் முகமது(18) மற்றும் ஜயித்(7) ஆகியோரையும் அழைத்து வந்தார்.

ஹங்கேரி வந்த அகதிகள் போலீசாருக்கு பயந்து ஓடினர். அப்போது பெண் பத்திரிக்கையாளரான பெட்ரா லாஸ்லோ என்பவர் அந்த சம்பவத்தை தனது கேமராவில் படம் பிடித்தார். அப்போது அவர் தப்பியோடிய அகதிகளின் காலை வாரி விட்டார். பெட்ரா நடுவில் காலை விட்டதால் ஒசாமா தனது மகன் ஜயிதுடன் கீழே விழுந்தார்.
இந்நிலையில் ஒசாமா தனது மகன்களுடன் புதன்கிழமை இரவு ஸ்பெயின் வந்தார். இதற்கிடையே ஒசாமா கீழே விழுந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது. ஸ்பெயினில் உள்ள கெடாபே நகருக்கு வந்துள்ள ஒசாமாவுக்கு கால்பந்து பயிற்சியாளர் வேலை அளிக்கப்பட்டுள்ளது.
கெடாபேவுக்கு வந்த அவரை தேசிய பயிற்சியாளர் பயிற்சி மைய தலைவர் மிகுல் கலான் வரவேற்று வேலைக்கான கடிதத்தை அவரிடம் அளித்தார். கலான் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications