தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த.. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்
கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலமானர்.
அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உரிமைகள் பல காலமாகத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்காகக் களத்தில் பல காலமாகப் போராடி வருபவர் இரா. சம்பந்தன்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இவர், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகவும் இருந்து வருகிறார். மேலும், பல ஆண்டுகளாக எம்பியாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதற்கிடையே வயது மூப்பு காரணமாக சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காகக் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த முதுபெரும் தலைவரான இவர், இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications