"கைமாறிய மனைவிகள்".. கரண்ட் ஷாக் வேற.. தாய்லாந்தில் வேலை.. சீனர்களுக்கு விற்கப்பட்ட இலங்கை பெண்கள்
இலங்கை பெண்களை சீனர்களுக்கு 5000 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்
பாங்காக்: தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி, இலங்கை பெண்களை அழைத்து சென்று, தலா 5ஆயிரம் டாலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
வறுமை காரணமாக வேலைவாய்ப்பு தேடி பல்வேறு இடங்களில் இலங்கை பெண்கள் முயற்சிகளை செய்து வருகிறார்கள்.. அப்படிப்பட்ட பெண்களுக்குதான் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளனர்..
அப்படி சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து தப்பி சென்று தாய்லாந்து போலீசாரிடம் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.. நேற்றைய தினம் அவர்கள் அனைவரும், நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..

கரண்ட் ஷாக்
ஆனால், இந்த பெண்கள், போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர்.. ருவான் பத்திரன என்பவரின் மகன்தான் இதற்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.. வேலைதருவதாக சொல்லி, சீனர்களின் தொழிற்சாலைகளில் இலங்கை பெண்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.. பிறகு அளவுக்கு அதிமான சித்ரவதைகளுக்கு அவர்களை உள்ளாக்கி உள்ளனர்.. அதாவது, அதிக நேரம் வேலை பார்க்கவிடுவார்களாம்.. வெயிலில் நிற்க வைப்பார்களாம். தேவையேயில்லாமல் வெயிலில் ஓட சொல்லுவார்களாம்.. கரண்ட் ஷாக் வைப்பார்களாம்..

5000 டாலர்கள்
சுமார் ஒரு மாத காலம் சாப்பாடு இல்லாமல் ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பார்களாம்.. இலங்கைக்கு அனுப்புவதற்கு 5000 டாலர்களை செலுத்துமாறு சித்ரவதை செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். பெண்களை இப்படி சீனர்களுக்கு விற்கும் ருபான் பத்திரன என்பவர் உள்ளூர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்கிறார்கள். அத்தனை பெண்களையும் பணத்துக்காகவே விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் கதறல்களை கேட்டு அதிர்ந்த போலீசார், ருபான பத்திரன வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்..

விற்பனை
ஆனால், இந்த கடத்தல் விற்பனையின் தலைவனாக இருப்பவர் அனுர சேனாத்ரத்னா என்பவர்தானாம்.. இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, வீட்டில் இருந்து திடீரென அவர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போதைக்கு 20 வயதுடைய 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் அனைத்து விவரங்களையும் ஒரு மீடியாவில் பேட்டியாக தந்துள்ளனர்.

பெண்கள் விற்பனை
அதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு வரும் சீன நாட்டவர்கள், கல்யாணம் என்ற பெயரில் பல இளம் பெண்களை சீனாவுக்கு அழைத்துசெல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. திருமணம் என்ற பெயரில் அந்த பெண்களை தவறான நடத்தைக்கு பயன்படுத்தி சில சீனர்கள் பயன்படுத்தி வருகிறார்களாம்.. பிறகு, கல்யாணம் செய்த பெண்களை, ஒருகட்டத்தில் பணத்துக்காக சீனர்களுக்கு விற்பனையும் செய்துவிடுவார்களாம். எனவே, இலங்கை பெண்கள் மேலும் பலர் சீனர்களிடம் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்கிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications