குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்குப் போராடிய ஸ்ரீதேவி
குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடியிருக்கிறார் ஸ்ரீதேவி.
Recommended Video

துபாய்: மதுபோதையில் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடி மரணித்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.
துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி தங்கியிருந்த விடுதியில் மரணமடைந்தார். இந்தியாவையே இந்த செய்தி உலுக்கி எடுத்தது.

அறிக்கை சொல்வது என்ன?
தற்போது ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான துபாய் தடயவியல் அறிக்கையை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி உயிரிழப்பு ஏன்?
மேலும் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் இதயம் நின்று போனதால் ஸ்ரீதேவி உயிர் பிரிந்தது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருக்கிறார்.

உயிருக்கு போராடிய ஸ்ரீதேவி
அப்போது மது போதையில் இருந்ததால் குளியல் தொட்டியில் தவறி விழுந்திருக்கிறார். குளியல் தொட்டியில் தவறி விழுந்த ஸ்ரீதேவி எழுந்திருக்க முடியவில்லை. எழுவதற்காக 15 நிமிடம் போராடியிருக்கிறார்.

சடலமாக மீட்பு
ஆனாலும் அந்த போராட்டம் பலன் தரவில்லை. குளியல் தொட்டியில் நீரில் மூழ்கிய நிலையில் அப்படியே மரணித்துவிட்டார் ஸ்ரீதேவி என்கிறது துபாய் தடவியல் அறிக்கை. இந்த 15 நிமிடத்துக்குப் பின்னரே கணவர் போனிகபூரால் குளியல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications