நெதர்லாந்து கொடுத்த சோழர் கால செப்பேடுகள்! அடுத்த லெவலுக்கு உயர்ந்த இரு நாட்டு உறவு!
ஆம்ஸ்டர்டாம்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக, நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரில் அந்த நாட்டுப் பிரதமர் ராப் ஜெட்டன் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே நேற்று மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து கொடுத்திருந்தது. இதனையடுத்து இரு நாட்டு உறவும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் மிக முக்கிய மைல்கல்லாக, இந்தியாவின் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் உலகப் புகழ்பெற்ற ASML நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம், குஜராத்தின் தோலேராவில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் அதிநவீன செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு நெதர்லாந்து தனது தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்ளது.
அதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைய, இரு நாடுகளும் இணைந்து 'கிரீன் ஹைட்ரஜன்' மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்பில் தங்களின் கூட்டுப் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. நெதர்லாந்தின் தொழில்நுட்பத் திறனையும், இந்தியாவின் அசுர வேக உழைப்பையும் இணைத்து இதில் செயலாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து நெதர்லாந்தின் முன்னணி எரிசக்தி, துறைமுகம், விவசாயம், மருத்துவம் மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "இன்றைய இந்தியா பிரம்மாண்ட அளவிற்கும் நிலையான தன்மைக்கும் ஒரு சிறந்த அடையாளம்" என்று குறிப்பிட்டார். வரி சீர்திருத்தங்கள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்கள் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதால், நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், இங்கேயே பொருட்களை வடிவமைத்து தயாரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்துவதற்கு இரு தலைவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் விண்வெளி, சுரங்கம், அணுசக்தி போன்ற துறைகள் தனியார் முதலீட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications